வெறும் 5 நிமிடத்திற்கு 5 கோடி வாங்கிய பிரபல நடிகை! யார், எதுக்கு தெரியுமா ! புகைப்படம் உள்ளே

0
2189
priyanka-chopra
- Advertisement -

பிரியங்கா சோப்ரா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பாலிவுட்டின் பிரபல நடிகையான இவர், 2000 ஆண்டின் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு, உலக அழகி பட்டத்தையும் வென்றார்.
priyanka-chopraஇவர் தயாரிப்பாளர், பாடகி, நடிப்பு என பன்முகம் கொண்டவர். பாலிவுட்டில் கலக்கும் இவர் , தமிழிலும் விஜய்யுடன் கலக்கியுள்ளார். சமீபத்தில் ஈஸ்டர்ன் ஐ என்ற பிரபலமான பத்திரிகை ஒன்று, ஆசியாவிலே எந்த நடிகை மிகவும் கவர்ச்சியான நடிகை என்று ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தது.

இதில் இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஆசியாவிலே முதலிடம் பிடித்தார். கோலிவுட்டிலும் , பாலிவுட்டிலும் கலக்கிய பிரியங்கா சோப்ரா, கவர்ச்சியால் தற்போது ஹொலிவூடிலும் கலக்கப்போகிறார். தற்போது ஹொலிவுட்டில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார் என, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மும்பையில் 19 தேதி பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ஒரு கலை நிகழ்ச்சியில், பிரியங்கா சோப்ரா தனியாக நடனமாட இருப்பதாக தெரிகிறது. இவர் ஆடும் அந்த நடனம் வெறும் 5 நிமிடம் தான். ஆனால் அந்த 5 நிமிடத்திற்கு அவர் வாங்கும் தொகை மட்டும் 5 கோடி என சொல்லப்படுகிறது. ஏதுவாக இருந்தாலும் 5 நிமிடத்திற்கு, 5 கோடி கொஞ்சம் ஓவர் தான்.