போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகுல் பிரீத் சிங் தம்பி கைதாகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாகவே சினிமா பிரபலங்கள் போதைப் பொருளை பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் இது தொடர்பான குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. இதனால் சில பிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கி கைதும் ஆகி இருக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைந்திருந்தார். பல போராட்டங்களுக்கு பிறகுதான் அவர் வெளியில் வந்தார். இவரை தொடர்ந்தும் சில பிரபலங்கள் போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் கைதாகி இருந்தார்கள். இந்த நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் தம்பி கைதாகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.
போதை பொருள் வழக்கு:
அதாவது, ஹைதராபாத் போலீசார் போதைப் பொருளுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்திருந்தது. அவர்கள் கொகைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பின் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களிடம் போதைப்பொருள் வாங்கும் நபர்கள் குவித்த விவரம் தெரிய வந்திருக்கிறது. அதில் ராகுல் ப்ரீத்தின் தம்பி அமன் ப்ரீத் சிங் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அமன் ப்ரீத் சிங் கைது:
மேலும், இவர் மட்டும் இல்லாமல் நான்கு பேரையுமே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் 200 கிராம் கொகைன் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அதனுடைய மதிப்பு 35 லட்சம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அமன் ப்ரீத் சிங்கை மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப்பட்டிருந்தது. அதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாக இருக்கிறது. தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி வருகிறது.
ராகுல் பிரீத் சிங் திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிகை ரகுல் பிரித் சிங் திகழ்ந்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் இந்தி மற்றும் கன்னட மொழி கூட திரைப் படங்களில் கூட நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.
இந்தியன் 2:
அதற்குப் பின்னர் தான் இவர் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.