சாமி- மிரட்டும் சாமி-2 ட்ரைலர் இதோ

0
221
Vikram

தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான “சாமி’ படம் மாபெரும் ஹிட்டானது. நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி திரைக்கு வெளிவர தயாராக இருக்கிறது.

மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் பாகத்தில் நடித்திருந்த த்ரிஷாவை தவிர மற்ற அனைவரும் இடம்பெற்றிருந்தனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ,அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடிக்கிறார்.

இதில் அப்பா விக்ரம் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது போல தெரிகிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி இரண்டு மாதத்திற்கு மேலான நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.முதல் ட்ரைலர் போலவே இந்த ட்ரைலரும் அதிரடியாகவே உள்ளது.