‘அம்மாவாக இருக்கவே விரும்புகிறேன்’- தாய்மை அடைவது குறித்து மனம் சிறந்த நடிகை சமந்தா

0
123
- Advertisement -

தாய்மை அடைவது குறித்து நடிகை சமந்தா பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் இந்தியாவின் பழமொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வந்த தகவல் நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். சமீபத்தில் தான் இவர் குணமடைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தற்போது இவர் எல்லா மொழிப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாலிவுட் தொடரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

Citadel : Honey Bunny:

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் ராஜ் & டி.கே இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தான் இந்த தொடர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸில் சமந்தா ரகசிய ஏஜென்ட் ஆகவும், அம்மாவாகவும் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் ஹிட்டடித்த இந்த வெப் சீரியஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா:

இந்நிலையில் தனியார் செய்தி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சமந்தா, ‘Citadel: Honey Bunny’ தொடரில் தாயாக நடித்ததை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில், நான் தாய்மை அடைய இன்னும் தாமதமாகவில்லை. எனக்கு தாய்மை அடையும் கனவு இன்னமும் இருக்கிறது. உண்மையில் தாயாக இருப்பதை மிகவும் நேசிக்கிறேன். நான் எப்போதும் அம்மாவாக இருக்கவே விரும்புகிறேன். நான் அது மிக அற்புதமான அனுபவம்.

-விளம்பரம்-

தாய்மை குறித்து:

மேலும், அந்த அனுபவத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் வயதாவதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். ஆனால், தாய்மை அடைய வயது ஒரு தடை இல்லை. ஒருவரின் வாழ்க்கையில் தாய்மை அடைய முடியாத காலம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்தத் தொடரில் நடித்த குழந்தையுடன் பழகியது, என் சொந்த குழந்தையுடன் பழகுவது போலவே நான் உணர்ந்தேன். நான் இப்போது என் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இடத்திற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

நன்றியுடையவளாக இருக்கிறேன்:

மேலும், நான் எதில் கவனம் செலுத்த வேண்டும், எது எனக்கு முக்கியம் என்பதெல்லாம் எனக்கு தெளிவாக தெரியும். அதனால், இப்போது இருக்கும் இந்த நிலையை அடைந்ததற்கு உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு முழுமையாக கிடைக்கிறது. அதற்காகவே நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இதற்கு முன்பு எல்லாம் நான் இப்படி யோசித்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை. என் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நன்றியுடையவளாக இருக்க விரும்புகிறேன் என்று எமோஷனலாக கூறியுள்ளார் ‌.

Advertisement