சமந்தா-நாகசைத்தன்யா ‘Tattoo’ அர்த்தம் இதுதான் .! ரகசியத்தை வெளியிட்ட சமந்தா..!

0
212
Samantha-Tattoo
- Advertisement -

நடிகை சமந்தா, தென்னிந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார்.

samantha

திருமணத்திற்கு பின்னும் அம்மணியின் கவர்ச்சி சற்றும் குறையவில்லை. சமீபத்தில் இவர் நடித்த ‘ரங்கஸ்தளம்’ என்ற படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கடுத்து சமீபத்தில் விஷால் நடித்த ‘இரும்பு திரை’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

- Advertisement -

தெலுங்கு சினிமாவின் இளம் தம்பதிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நாக சைதன்யா-சமந்தா. இருவர் கையிலும் ஒரு இரட்டை மேல் அம்பு குறியை குறிக்கும் டாட்டூ ஒன்றை பச்சை குத்தியுள்ளார். அதனால், இந்த டாட்டூவின் அர்த்தம் என்னவென்று அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

samantha

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம் அந்த டாட்டூ குறித்து அர்த்தம் கேட்கப்ட்டது. இதற்கு பதிலளித்த சமந்தா ‘இந்த டாட்டூ நிஜவாழ்க்கையையும், கணவன் மனைவியையும் குறிப்பதாகும். நாங்கள் திரைத்துறையில் கணவன்-மனைவியாக இருந்தாலும் எப்போதும் எங்களுடைய நிஜவாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த டாட்டூவைக் குத்தியுள்ளேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement