சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘லட்சுமி’ சீரியலில் இருந்து கதாநாயகன் சஞ்சீவ் வெங்கட் விலகி இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கின்றது. இதனால் வித்தியாசமான கதைகளத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. சொல்லப்போனால், தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சன் டிவி இருக்கிறது. மேலும், டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருப்பதற்காகவே அடிக்கடி புது புது சீரியல்களை சன் டிவி வெளியிட்டு வருகிறார்கள். அதோட குடும்பப் பின்னணியை கதைக்களமாக வைத்து, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சீரியல்களே சன் டிவியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
லட்சுமி சீரியல்:
அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ‘லட்சுமி’. இந்த சீரியல் கடந்த மார்ச் மாதம் தான் சன் டிவியில் துவங்கப்பட்டது. இந்த சீரியலை சாய் மருது என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இது தொடரில் சஞ்சீவ் வெங்கட் கதாநாயகனாகவும், சுருதி ராஜ் கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். இவர்களுடன் சேர்ந்து மீனா வெம்புரி, கீர்த்தி விஜய், மேகா மேனன், நித்யா ரவீந்திரன், செந்தில்நாதன், மகிமா உள்ளிட்ட கலர் நடித்து வருகின்றனர்.
கதைக்களம்:
தற்போது வரை 100 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியல், திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வந்த பின்னரும், தன்னுடைய தங்கைகள் மற்றும் அம்மாவை நல்லபடியாக வாழவைக்க, கதாநாயகி எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ் விலகல்:
இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவ் வெங்கட் தற்போது ஒரு சில காரணங்களால் இந்த சீரியலை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனால், அவர் எந்த காரணத்தால் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் தெரியவில்லை. தற்போது சஞ்சீவுக்கு பதிலாக சீரியல் நடிகர் எஸ் எஸ் ஆரியன் கதாநாயகனாக கமிட்டாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த மகராசி என்னும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மகராசி சீரியல்:
இந்தத் சீரியலின் கதை ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு பாரதி என்ற பெண், சிலரால் தேடப்படுகிறார். அவர்களிடமிருந்து தப்பித்து தமிழ்நாடு செல்லும் ட்ரெயினில் வருகிறார். அங்கு தமிழை சந்திக்கிறார் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் தமிழில் மனைவி போன்று நடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், புகுந்த வீட்டில் இவள் மருமகள் இல்லை என்கிற உண்மை எப்படி தெரிய வருகின்றது. இவர்களுக்குள் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இந்த சீரியலின் கதை.