சுத்தும் பூமியை விடவும் பொறுமையானவர் தளபதி விஜய்..! புகழ்ந்து பேசிய சர்கார் படத்தின் நடிகர்.!

0
69
Actor-vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் விஜய். தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழியிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் விஜயை பொறுத்த வரை எப்போதும் அமிதியானவர் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் , திரைக்கு முன் அவர் அப்படியே வித்யாசமானவர் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தமிழ் நடிகர்கள் பல பேர் நடிகர் விஜய் குறித்தும் அவரது குணம் குறித்தும் பேட்டிகளில் தெரிவிதிருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவர் நடிகர் விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஜய் தற்போது “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அமெரிக்கா, லாஸ் ஏஞ்ல்ஸ் நகரிலும் நடைபெற்றது.

- Advertisement -

அப்போது பிரான்ஸ் நாட்டின் பிரபல புகைப்பட கலைஞ்சரான பிராட் என்பவர் “சர்கார் ” படத்தின் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவத்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் , விஜய் இந்தியாவில் மிக பெரிய நடிகர் என்று பலரும் என்னிடம் கூறினார்கள்.

vijay actor

ஆனால், அவருடன் பணியாற்றிய போது அப்படி எனக்கு தெரியவில்லை. அவர் மிகவும் அமைதியாகவும் கூச்ச சுபாவத்துடனும் தன் இருக்கிறார். உண்மையில் அவர் ஒரு பெரிய நடிகரை போல இல்லாமல் மிகவும் தன்நடக்கத்துடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Advertisement