கல்லறை அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்ட சிம்பு பட நடிகை..!எதற்கு தெரியுமா …!

0
2
Dayanaera
- Advertisement -

நடிகைகளை பொறுத்த வரை அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது தான் வழக்கம்.ஆனால், சமீபத்தில் நடிகை டயானா எரப்பா கல்லறைக்கு அருகில் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Dayana erappa

சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “செக்க சிவந்த வானம் “படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா. ர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தார்.

- Advertisement -

பின்பு 2012 இல் உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.சர்வதேச பேஷன் பத்திரிகைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றன. மேலும் பல முன்னனி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

இவரது முதல் படமான “செக்க சிவந்த வானம் படத்தில்” இவர் நடித்த கதாபாத்திரம் இறந்து விடுவது போல படமாக்கபட்டது. இந்நிலையில இந்த படத்தில் இவரது புகைப்படம் வைக்கப்பட்டு அமைக்கப்பட்ட கல்லறையின் செட் அருகில் நின்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை டயானா.

Advertisement