விஜய் தேவர்கொண்ட படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள்.! தமிழ் நடிகை ஷாக்.!

0
1287
Shalu-Shammu

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. தெலுங்கு சினிமாவில் ‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புலு’,அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’, டாக்ஸிவாலா’ உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழ்’ ரசிகர்களைப் பெற்றவர்.

அதே போல பிரபல பத்திரிகை நிறுவனமானன போர்ப்ஸ் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் மணர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபல இயக்குனர் கூறியதாக வருத்தப்படாதா வாலிபர் சங்கம் பட நடிகை பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் மீடூவால் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்’ அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு ‘விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதனை தான் வெளியில் சொல்லவில்லை ‘ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement