கோவிலில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா.! ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
115
shreya-saran

கவர்ச்சிக் கன்னி ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.மேலும் தமிழில், தெலுகு. இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

shreya

36 வயதாகும் ஸ்ரேயா கடந்த மார்ச் மாதம் ஜெர்மனியை சேர்ந்த டென்னிஸ் வீரரான தனது காதலரை திடீர் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார்.ஆனால், திருமணத்திற்கு பின்னும் நான் நடிப்பேன் என்று தெரிவித்திருந்த பின்னரே ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் நடிகை ஸ்ரேயா. கடைசியாக நடிகை ஸ்ரேயா, ‘துருவங்கள் 16’ என்ற வித்யாசமான கதை களத்தை கொண்ட வெற்றி படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘நரகாசுரன்’ என்ற படத்தில், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

shreyaa

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா முகத்தை மூடிக்கொண்டு பொது இடத்தில் வளம் வருவது போல ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால், சமீபத்தில் நடிகை ஸ்ரேயா தனது அம்மாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வழிபாட்டிற்கு சென்றுள்ளார். என்றும் ரசிகர்களின் கண்களில் இருந்து தப்பிக்கவே தனது முகத்தை மறைத்து சென்றதாக பின்னர் தெரியவந்தது. இருந்தும் ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டுபிடித்து புகைப்படம் எடுக்க பின்தொடர்ந்தனர். எனவே, தரிசனம் முடித்து அம்மாவுடன் அவர் சென்றுவிட்டார்.