திருமணத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாரே..! புதிய கெட்டப்பில் ஷ்ரேயா..! புகைப்படம் இதோ

0
342
Shreya-saran
- Advertisement -

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. கடந்த மார்ச் மாதம் தனது காதலரான ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Shreya

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். மேலும்,திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்ட்ட நடிகை ஸ்ரேயா திருமணம் முடிந்த சில நாட்களிலேயே படங்களில் நடிக்க மீண்டும் வந்துவிட்டார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. அதில் அவர் நடிகர் விக்ரம் நடித்த “கந்தசாமி ” படத்தில் தோன்றியது போலவே தனது முடியை ஷார்ட் கட்டிங் செய்து கொண்டு ஒரு முரட்டு லுக்கில் இருக்கிறார்.

நடிகை ஸ்ரேயா தெலுங்கில் “வீர போக வசந்த ராயுலு ” என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தானம் இது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் இந்திரசேனா என்பவர் இயக்கவுள்ளார். முற்றியலும் திரில்லர் படமாக இந்த படம் இருக்கும் என்று டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement