புகை பிடிக்கும் ஸ்ரேயா..! பிறந்தநாள் அன்று சர்ச்சை.! வீடியோ

0
173
shreya

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. கடந்த மார்ச் மாதம் தனது காதலரான ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். மேலும்,திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்ட்ட நடிகை ஸ்ரேயா திருமணம் முடிந்த சில நாட்களிலேயே படங்களில் நடிக்க மீண்டும் வந்துவிட்டார்.

திருமணத்திற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை ஷ்ரேயா தற்போது தெலுங்கில் “வீர போக வசந்த ராயுலு ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்திரசேன இயக்கிவரும் இந்த படத்தின் பாரஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் வித்யாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் ஷ்ரேயாவின் கெட் அப் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Actress shreya

இந்நிலையில் நடிகை ஷ்ரேயா தனது 36 வது பிறந்தநாளை (செப்டம்பர் 11)கொண்டாடினர். ஷ்ரேயாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் “வீர போக வசந்த ராயுலு ” வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் நடிகை ஷ்ரேயா புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதை கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போகினர்.