இளம் வயதில் வழக்கறிஞ்சராக மாறிய ஜில்லுனு ஒரு காதல் பட குழந்தை நட்சத்திரம். எவ்ளோ வயசு தெரியுமா ?

0
2279
shriyasharma

தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கி உள்ளார்கள். அப்படி படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்தும் விட்டார்கள். அதிலும் அவர்கள் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களை பார்க்கும் போது அந்த குழந்தையா இப்படி எல்லாம் போஸ் கொடுப்பது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷரியா ஷர்மா.

இவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா. இவர் 2005-ம் ஆண்டு சிரஞ்சீவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்து போனார்கள். அந்த படத்தை தொடர்ந்து நடிகை ஷரியா ஷர்மா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதற்கு பின் நடிகை ஷரியா ஷர்மா தெலுங்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயாகுடு’ என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். அந்த படத்தை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். பிறகு நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் நடிப்புக்கு அப்ளாஸ் குவிந்தது. இவர் மும்பையில் சட்ட படிப்பை முடித்த நிலையில் தற்போது வழக்கறிஞர் பட்டத்தை பெற்று வழக்கறிஞராக மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement