செல்வம் வீட்டு விசேஷத்தில் நடக்கும் கலவரம், கோபத்தில் முத்து செய்த வேலையால் அதிர்ச்சியான மீனா-சிறகடிக்க ஆசை

0
271
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடையில் மர்ம நபர் கொடுத்த கொடுத்த கடிதத்தை நினைத்து பயப்படும் மனோஜ். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விட்டு விஜயாவிற்கு பிரியாணி வாங்கி கொண்டு போய் கொடுத்தார். ஆனால், விஜயா பிரியாணி சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டு இருந்தார். உடனே மீனா, நடந்த விசயத்தை சொல்ல, முத்து- அண்ணாமலை இருவருமே பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

கடந்த வாரம் செல்வம் குடித்துவிட்டு, தன்னுடைய அப்பாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று புலம்பி கொண்டு இருந்தார். இதை அறிந்த முத்து, மீனாவிடம் பணத்தை கேட்க, அவர் முடியாது என்று அறிவுரை சொன்னார். ஆனால், முத்து என்ன செய்வது என்று புரியாமல் வருத்தத்தில் இருந்தார். இன்னொரு பக்கம், ரோகினி தனக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்டார். உடனே அவர் ஷாக் ஆகி முடியாது என்று மறுத்தார். இதனால் ரோகினி- மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

மேலும், ஸ்ருதி, ரவி சொன்ன ஐடியால் மற்ற ரெண்டு ஜோடிகள் சமாதானம் ஆனார்கள். பின் ரோகினிக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதாக மனோஜ் சொன்னவுடன் சந்தோசப்பட்டார். மறுநாள் கடையில் ரோகினி பணம் வாங்க வந்தார். அப்போது ரோகினியின் தோழி ட்ராமா செய்து மீண்டும் மனோஜிடம் வட்டிக்கு விட்டார். பின் வெளியில் வந்த ரோகினி, 1 லட்ச ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிடு, மீதி 75 ஆயிரத்தை கிரிஷ் படிப்பு செலவு கொடுத்து விடு என்று சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, செல்வத்தை சந்தித்து சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

சீரியல் கதை:

அதற்கு பின் முத்து, பணத்தை ரெடி பண்ணி செல்வத்திடம் கொடுக்க, அவர் வாங்க மறுத்தார். உடனே முத்து, என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுகிறாய்? என்று கேட்டதற்கு செல்வம் எதுவுமே சொல்லவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில், மீனா வந்து சென்ற விஷயத்தை செல்வம் முத்துவிடம் சொல்ல, முத்து கோபப்பட்டு மீனாவிடம் கேட்கிறார். உடனே முத்து -மீனா இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. கடைசியில் பரிசு பணத்தை தான் பேங்கில் இருந்து எடுத்துக் கொடுத்ததாக முத்து சொன்னவுடன் மீனா கோபப்பட்டு கத்துகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அப்போது உனக்கும் அண்ணனுக்கும் என்ன வித்தியாசம் என்று மீனா கேட்டவுடன், முத்து அவரை அடிக்க கை ஒங்குகிறார். இதனால் மனம் உடைந்த மீனா அமைதியாகி எதுவுமே பேசாமல் விடுகிறார். மறுநாள் செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து கிளம்புகிறார். அதை பார்த்து அண்ணாமலை மீனா எங்கே என்று கேட்க, மீனாவும் நான் ரெடியாக தான் இருக்கிறேன் என்று சொல்லி இருவருமே கிளம்பி வருகிறார்கள். அங்கு செல்வம் வீட்டில் தடபுடலாக விசேஷம் நடக்கிறது .

சீரியல் ட்ராக்:

மேலும் , செல்வத்தின் வீட்டில் எல்லோருமே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து இருக்கிறார்கள். இதை பார்த்த முத்து எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் சாப்பாடு போடும் இடத்தில், இது ஒரு பிரியாணியா? என்ன செலவு பண்ணி இருக்கிறாய்? என்றெல்லாம் பேச செல்வத்திற்கும் அவருடைய உறவினர்கள் உடைய சண்டை நடக்கிறது. இதை தடுக்க போய் முத்து அவர்களை அடித்து விடுகிறார். இதனால் செல்வம் உறவினர்களுக்கும் முத்துவுக்கும் இடையே கலவரம் அதிகமாகிறது. மீனா எவ்வளவு தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement