பணத்திற்காக போராடும் முத்து, கேஸ் விஷயத்தில் விஜயாவிடம் வக்கீல் சொன்ன வார்த்தை- சிறகடிக்க ஆசை

0
141
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா வீடியோவால் மீனா வீட்டில் கலவரம் வெடித்தது. பின் சத்யாவை பாதுகாப்பாக தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைத்தார் முத்து. அதற்குப்பின் போலீஸ் இடம் சத்யா மீது விஜயா கம்பளைண்ட் கொடுத்தார். பின் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார். உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து பார்வதி வீட்டில் தங்கி இருக்கிறார். இன்னொரு பக்கம் சிட்டி, பிஏவை அடித்ததால் உயிருக்கு போராடுகிறான்.

-விளம்பரம்-

2 லட்சம் கொடுங்கள் என்று மிரட்ட ரோகினியும் பணத்தை ரெடி பண்ணுகிறேன் என்று கிளம்பி விட்டார். ஆனால், பிஏவிற்கு ஒன்றுமே ஆகவில்லை. இருவருமே சேர்ந்து ரோகினி இடம் பணத்தைப் பறிக்க திட்டம் போட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் முத்து, வக்கீலை பார்த்து நடந்ததை சொன்னார். அவர், கம்ப்ளைன்ட் கொடுத்தவர் வாபஸ் வாங்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்று சொன்னார். உடனே மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் நடந்ததை சொல்லி எடுத்து புரிய வைத்தார்கள். அண்ணாமலையும் மனமிரங்கி விஜயாவிடம் பேச அவர் இருக்கும் இடத்திற்கு போனார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, கேஸை வாபஸ் வாங்க சொல்லி விஜயாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், விஜயா முடியாது என்று மறுத்தார். பின் விஜயா, முத்து- மீனா வீட்டை விட்டு வெளியே போனால் நான் கேசை வாபஸ் வாங்குவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி வந்துவிட்டார். பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை, விஜயா சொன்ன விஷயத்தை சொல்ல, முத்துவால் எதுவுமே பேச முடியவில்லை இருவருமே அமைதியாகி விட்டார்கள்.

நேற்று எபிசோட்:

பின் சுருதி- ரவி இருவருமே முத்து,மீனாவிற்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வக்கீல், இது ரொம்ப கிரிட்டிகள் கேஸ். சத்யாவை வெளியே எடுப்பது ரொம்ப கஷ்டம். நான் என்னால் முடிந்தவரை செய்கிறேன். சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து சீதாவிற்கு மாப்பிள்ளை பார்த்த வீட்டில் இருந்து போன் வந்தது. அவர்கள் சத்யா வீடியோவை தெரிந்து கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்கிறார்கள். கோபப்பட்டு முத்துவும் திட்டி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் மாப்பிள்ளை வீட்டில் சீதாவை வேண்டாம் என்று சொன்ன விஷயம் அறிந்த மீனாவின் அம்மா ரொம்ப வருத்தப்படுகிறார். சீதாவும் சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வக்கில், 5 லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று சொன்னதால் முத்து மும்முரமாக அலைந்து கொண்டிருக்கிறார். பின் முத்து, ஒரு இடத்தில் வட்டிக்கும் தன்னால் முடிந்தவரை வாங்கிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மாவும் தன்னுடைய கரும்பு மெஷினை அடமானம் வைக்கிறார். அதை முத்து தடுத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் தங்களிடம் இருக்கும் சில நகைகளை கொடுத்து பணம் ரெடி பண்ண சொல்கிறார்கள். கிட்டத்தட்ட பணம் ரெடி பண்ணி விடுகிறார்கள். அண்ணாமலையும் தன்னுடைய பங்கிற்கு பணத்தை கொடுக்கிறார். இதையெல்லாம் வக்கீலிடம் கொடுத்து சத்யாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்கள் முத்து-மீனா. மேலும், வக்கீல், விஜயாவை சந்தித்து பேசும்போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் அவர் பணம் தருகிறோம். சத்யா ஜெயிலுக்கு போவதால் உங்களுக்கு ஒரு லாபம் இல்லை என்று சொன்னவுடன் விஜயா அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement