விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, கதிர் விஷயமாக தான் நாங்கள் போயிருந்தோம். கூடிய விரைவில் கண்டுபிடிப்போம் என்று சொன்னவுடன் ரோகினி, இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதை விடுங்கள் என்று சொன்னார். நேற்று எபிசோட்டில் மீனா, எதற்கு வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டவுடன் ரோகினி, இனிமேல் கதிரை நாங்கள் கண்டுபிடித்துக் கொள்கிறோம். முத்து கண்டுபிடித்தாலுமே மனோஜை மட்டம் தட்டி பேசுவார் என்று சொன்னவுடன் முத்து சண்டை போட்டார். அதற்குப்பின் முத்து- மீனா இருவருமே ரோகினி சொன்னதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு பின் முத்து-மீனா இருவரும் சத்யாவை சந்தித்து ரோகினி கடன் வாங்கிய விஷயத்தை பற்றி விசாரிக்க சொன்னார்கள். இன்னொரு பக்கம் வித்யாவின் வீட்டிற்கு சென்ற ரோகினி, சிட்டியிடம் கடன் வாங்கிய விஷயம் முத்துவிற்கு தெரிந்து விட்டது. இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி சிட்டியை தனியாக பேச அழைத்தார். அப்போது ரோகினி, கதிர் விசயத்தை சொல்ல, இது தான் சந்தர்ப்பம் என்று சிட்டி நினைத்தார். பின் ரோகினி, கோயிலில் அவனுடைய வீடியோ ரெக்கார்டு ஆகி இருக்கும். அவனை அடையாளம் காண்பிக்கிறேன் கண்டுபிடியுங்கள் என்று சொல்ல, சிட்டியும் ஒத்து கொண்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோடில் மலேசியாவில் இருந்து வந்த வயதானவர்களை முத்து சவாரிக்கு அழைத்து வந்தார். அவர்கள் தங்களுக்கு 60-வது கல்யாணம் நாள் என்று சொன்னவுடன் முத்து மீனாவிடம் சொல்லி கோயிலில் ஏற்பாடு செய்தார். இன்னொரு பக்கம் சிட்டி, மீனா அம்மா வேலை செய்யும் கோவிலுக்கு சென்று கதிர் வீடியோவை கேட்க, அவர்கள் முடியாது என்று மறுத்தார்கள். இதையெல்லாம் பார்த்து மீனாவின் அம்மா, சத்யாவிற்கு சந்தேகம் வந்தது. இதைப் பற்றி அவர்கள் மீனாவிடமும் சொன்னார்கள்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து முத்து வந்த உடன் கோயிலில் அந்த வயதானவர்களுக்கு பூஜை நடந்தது. அதற்குப்பின் முத்து, இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்கலாம் என்று சொன்னார். உடனே மீனா, இவர்களும் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் தானே, ரோகினி அப்பாவை பற்றி விசாரிக்கலாம் என்றார். அதற்கு முத்து, சூப்பர் ஐடியா என்றார். இன்னொரு பக்கம் சிட்டி, கோயிலில் வீடியோ கிடைக்கவில்லை. நீங்களே ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு ரோகினி, உன்னை யாராவது பார்த்து விட்டார்களா? என்று கேட்க, மீனாவின் அம்மா-சத்யா எல்லாம் பார்த்தார்கள் என்று சொன்னவுடன் ரோகினி
பயந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, வீட்டில் தடபுடலாக சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா, யாருக்கு சமைக்கிறாய்? என்று கேட்டதற்கு, மலேசியாவில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் செய்கிறேன் என்று சொன்னவுடன் கோபப்பட்டு சண்டை போடுகிறார். உடனே அண்ணாமலை, என்னிடம் முத்து கேட்டு தான் செய்கிறான் என்றவுடன் விஜயா எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். அந்த சமயம் பார்த்து மலேசியாவில் இருந்து வந்தவர்களை முத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

சீரியல் ட்ராக்:
அவர்களை பார்த்து உபசரித்து அண்ணாமலை விசாரிக்கிறார். உடனே விஜயா, என்னுடைய மூத்த மருமகளும் மலேசியா தான் என்று ரோகினியின் கதவை தட்டுகிறார். ரோகினி, என்ன செய்வது என்று புரியாமல் உள்ளுக்குள்ளே பயந்து கொண்டே நிற்கிறார். எல்லோருமே ரோகினுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரோகினி பயத்திலேயே வெளியே வராமல் இருக்கிறார். பின் மலேசியாவில் எந்த இடம்? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகினி, பல் வலி என்று வீங்கியது போல் டிராமா செய்கிறார். இது எல்லாம் பார்த்து முத்துவிற்கு சந்தேகம் தான் வந்தது. ரோகினி ஹாஸ்பிடலுக்கு போகணும் என்று அங்கிருந்து வேகமாக கிளம்பி விடுகிறார். எல்லோரும் அமைதியாக நிற்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.