விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, தனக்கு தெரிந்த வக்கீல் இடம் பேசி இருந்தார். ஆனால், வக்கீலுமே இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றார். ரோகினிக்கு ஒண்ணுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் அப்பாவை சந்தித்து பேசி இருந்தார்கள். அதற்கு அந்த சிறுவன் அப்பா, கிரிஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கண்டிப்பாக இருந்தார். உடனே முத்து அவருடைய காலில் விழுந்து கெஞ்சி கதறினார். இருந்தாலுமே அந்த சிறுவனின் அப்பா மனம் இறங்கவில்லை.

கிரிஷ் வாழ்க்கைக்காக முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த சிறுவனின் அப்பா கண்டு கொள்ளவே இல்லை. இருந்தாலுமே முத்து-மீனா இருவருமே அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார்கள். கடைசியில் அந்த சிறுவனின் அப்பா, முத்துவை உள்ளே அழைத்து பேச, முத்து, மன்னிப்பு கேட்டு கெஞ்சினார். உடனே அந்த சிறுவனின் அப்பா, நான் கிரிஷ்க்கு சில டெஸ்ட் வைப்பேன். அதற்கு பிறகு தான் நான் இந்த கேசை வாபஸ் வாங்கலாமா? என்று முடிவு செய்வேன் என்றார். அதற்குப்பின் மகேஸ்வரி வீட்டிற்கு முத்து-மீனா போனார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து, க்ரிஷிடம் அந்த சிறுவனின் அப்பா பேசணும் என்று சொல்லி இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் முடிவெடுப்பாராம் என்றார். இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகிணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் மனோஜ், கிரிஷ் செய்த வேலையை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமே சொன்னார். ரோகினி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது மனோஜ், கிரிஷ் இப்படி இருக்க காரணம் முத்து தான். இரண்டு பேரும் ரவுடி தான் ஆக போகிறார்கள் என்று ரொம்ப மோசமாகவும் ஏளனமாகவும் பேசி இருந்தார். இதை கேட்டு முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மனோஜின் சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். அப்போது மனோஜ், நீயும் சீர்திருத்த பள்ளிக்கு போனவ தானே என்று சொல்லி விட்டார். இதனால் முத்து மனமடைந்து நின்றார். உடனே அண்ணாமலை கோபத்தில் மனோஜை அடித்து விட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே திட்டி அனுப்பி விட்டார். மீனா, முத்து வாழ்க்கையில் நடந்ததை பற்றி விசாரித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று கேட்கிறார். அதற்கு முத்து, தன்னுடைய ஃபிளாஷ்பேக்கை சொல்கிறார். அப்போது முத்துவின் சிறு வயதில் விஜயா ஒரு ஜோசியரை சந்தித்து பேசுகிறார். அப்போது ஜோசியர், முத்து உங்களுடன் இருந்தால் உங்கள் வீட்டில் யாராவது உயிருக்கு ஆபத்து வரும். அவர் ஆறு வருடம் உங்களை விட்டு பிரிந்து இருக்கணும். அப்படி இருந்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். இதை பற்றி விஜயா, அண்ணாமலை இடம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்றாலும் விஜயாவின் பயத்திற்காக ஒத்துக் கொள்கிறார்.
அதற்குப்பின் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டியின் வீட்டிற்கு அண்ணாமலை, விஜயா வருகிறார்கள். அப்போது நடந்ததை பாட்டியிடம் விஜயா சொல்கிறார். பாட்டியுமே ஒத்துக் கொள்கிறார். ஆனால், முத்து தன்னுடைய அம்மாவை விட்டு பிரியா விருப்பம் இல்லாமல் கதறி அழுகிறார். இருந்தாலும் ஜோசியர் சொன்னதற்காக அங்கிருந்து விஜயா கிளம்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






