சொப்பன சுந்தரி நிகழ்ச்சியால் நடிகர் பிரசன்னாவுக்கு வந்த சிக்கல்..!

0
3
Prasanna
- Advertisement -

தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து சிறியவர் முதல் பெரியவர் வரை கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன.

Soppanasundari

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ், ரெடி ஸ்டெடி போ போன்ற நகழ்ச்சிகளில் பெண்களை ஆபாசமாக கட்டுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கு போட்டியாக தற்போது சன் குழுமும் சன் லைப் தொலைக்காட்சியில் ‘சொப்பன சுந்தரி’ என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் “அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல்” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தனர். அந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து சன் டிவி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை குடும்ப ரசிகர்கள் பார்க்க முடியாது என்று பலரும் குறை கூறிவந்த நிலையில் தற்போது அதற்கு போட்டியாக” சொப்பன சுந்தரி ” நிகழ்ச்சியில் போட்டியாளர்ர்கள் மிகவும் கவர்ச்சியில் எல்லை மீறி போய்கொண்டிருக்கின்றனர். இதனால் பல்வேறு தரப்பினரும் இந்த குறைகூறி வருகின்றனர். இந்த நிலையில் ட்விட்டர்ல் ரசிகர் ஒருவர் நடிகர் பிரசன்னாவை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

பேராசிரியர் மினர்வா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என்று பெருமை படாதீர்கள் பிரசன்னா. உங்கள் நிகழ்ச்சியில் இருக்கும் மாடலின் ஆபாசமான புகைப்படம் ஒன்றையும் நான் பார்த்தேன். உங்கள் நிகழ்ச்சியில் இருக்கும் நடுவருக்கு மாடல் மீது அத்துமீறி நடந்து கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சி எப்படி ஒரு மனிதாபமுல்ல ஷோ என்று நினைக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement