சென்னையில் இருக்கும் பெண்கள் அவனை செருப்பால் அடிக்க வேண்டும்.! ஸ்ரீ ரெட்டி ஆவேச பதிவு .!

0
60
- Advertisement -

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா பிரலங்கள் சிலர் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியிருந்தார். ஸ்ரீரெட்டி கூறி வரும் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி, பெயர் குறிப்படப்படாத பெண் ஒருவர், தான் வேலை செய்து வந்த இடத்தில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாக தனக்கு மெசேஜ் அனுப்பியதாக நடிகை ஸ்ரீரெட்டிக்கு பதிவிட்டுள்ளார்.

Actress sri reddy

இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி ”ஒரு பெண் எனக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். கண்டிப்பாக சென்னை பெண்கள் அனைவரின் சார்பாக அவரை செருப்பால் அடிக்க வேண்டும்” என்று மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

நடிகை ஸ்ரீரெட்டிக்கு அந்த பெண் அனுப்பிய மெசேஜ் என்னவெனில் ”நான் வெறும் நாட்கள் தான் வேலைபார்த்தேன்.
அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவர் என்னயுடைய கன்னத்தை கிள்ளியும், என்னை கட்டிபிடிக்கவும் முயன்றார். இதற்கு தயவு செய்து எதாவது நடவடிக்கை எடுங்கள்.
அந்த அலுவலகத்தின் பெயர் எச் ஆர் தவான்(HR DAWN ). அவருடைய பெயர் சிவகுமார். வேறு எதாவது பெண்கள் அங்கு வேலை செய்ய விரும்பினால் அது அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
அவர் ஒரு வீட்டில் தான் அந்த அலுவலகத்தை நடத்தி வருகிறார்.

அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் பெண்களை தான் குறிவைக்கிறார். தயவு செய்து இதற்கு எதாவது நடவடிக்கை எடுங்கள். செல்லப்பர் தெரு, படுப்பாக்கம், ராயப்பேட்டை, சென்னை 6000014, என்ற விலாசத்தில் தான் எச் ஆர் தவான்(HR DAWN ) அலுவலகம் உள்ளது.தயவு செய்து என்னை பற்றி காவல் துறையில் தெரிவிக்க வேண்டாம். இது தொடர்பாக எதாவது நடவடிக்கை எடுங்கள்.”

இவ்வாறு அந்த பெண் தனக்கு மெசேஜ் அனுப்பியதை ஸ்கிறீன் ஷாட் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக பல்வேறு முகநூல் வாசிகளும் அந்த பெண்ணிற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement