பட வாய்ப்பிற்காக தன்னை மாற்றிக்கொண்ட நடிகை.! என்ன செய்தார் தெரியுமா..!

0
1733
srividhya
- Advertisement -

மாடல் ட்ரெஸிலும் ,கவர்ச்சியான உடைகளிலும் வலம் வந்த நடிகைகள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் அடக்க ஒடுக்கமான தமிழ் பெண்ணாக தாவணியில் வலம் வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தற்போது மாடல் உடைகளில் தனது புது அவதாரத்தை எடுத்துள்ளார்

sridhivya

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு பின்னர் தமிழ்,தெலுங்கு என்று பிஸியாக நடித்து வந்தார். 30 வயதாகும் இவர், பார்ப்பதற்கு இன்னும் பள்ளி பருவ பெண் போல இருப்பதால் இவருக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களுடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது தமிழ்ல் நடிகர் அதர்வா நடித்து வரும் “ஒத்தைக்கு ஓத்த ” என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அந்த படத்தை தவிர வேறு எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் தானும் மாடர்ன் பெண்ணாக மாற முடிவெடுத்துள்ளார் இந்த குடும்ப குத்துவிளக்கு.

Sri-Divya

அதற்காக சமீபத்தில் மாடல் உடைகளை அணிந்து வித விதமாக போஸ் கொடுத்து, புகைப்படங்களை எடுத்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா. இதுவரை இவரை பெரும்பாலும் கிராமத்து கெட்டப்பில் பார்த்து வந்த ரசிகர்கள், தற்போது இவரின் புது அவதாரத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்

Advertisement