ரஜினி அருகில் இடம் பிடித்த எஸ் எஸ் சரவணன் ! காரணம் என்ன ?

0
1216
Rajini Kanth
- Advertisement -

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவிற்கு தமிழ் நடிகர் நடிகைகள் பலரும் சென்றுள்ளனர். இதற்காக பல முன்னணி நடிகர் நடிகைகளிடம் பேசப்பட்டது. ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவரும் பேசியதில், அஜித்தை தவிர மற்ற மூவரும் வருவதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Rajiniஇந்த கலைவிழாவிற்கு முன்னர் நட்சத்திர நடிகர் நடிகைகளை வைத்து கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் திரட்டப்படும் நிதி நடிகர் சங்க கட்டிடத்திற்கு பயன்படுத்தப்போவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மலேசியா சென்றடைந்தார். மேலும், அங்கு சென்றதும் ரஜினியின் சில புகைப்படங்கள் வெளியானது. இவற்றில் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் எஸ் எஸ் சரவணன் ரஜினிக்கு அருகில் உட்கார்ந்து இருப்பது போல போட்டோக்கள் வந்தது. தன் கடை விளம்பத்திற்காக கடந்த சில வருடங்களாக தானே நடித்து வந்த இவர் தற்போது ரஜினி அருகில் இடம் பிடித்துள்ளார். இதனால் அடுத்து ஹீரோவாக நடிக்க போகிறாரா இல்லை ரஜினியின் அரசியல் கட்சியில் இனைய விரும்புகிறாரா என பல சந்தேங்களை இந்த புகைப்படம் கிளப்பி உள்ளது.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரேயாவின் அரை நிர்வாண படத்தால் பரபரப்பு – வைரலாகும் புகைப்படம்

இதற்கு பின்பு ஏதாவது காரணம் இருக்கிறதா இல்லை இது எதேச்சையாக நடந்ததா என்பது ரஜினி சொன்னால் தான் தெரியும். அதுவரை புரளிகள் தான் ரெக்கை கட்டி பறந்துகொண்டிருக்கும்.