போட்டோ ஷூட் என்ற பெயரில் போட்டியாளர்கள் செய்த மோசமான செயல்..!இதுக்கு இந்தி பிக் பாஸ் பரவா இல்லை..!

0
2
Soppana-sundari
- Advertisement -

தொலைக்காட்சியில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் “பிக் பாஸ்” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தற்போது சன் டிவி “சொப்பன சுந்தரி ” என்ற புதிய ரியாலிட்டி சோவை தொடங்கியுள்ளது.

பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் “அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல்” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தனர். அந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து சன் டிவி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதுவரை உள்ளூர் தொலைக்காட்சியை காப்பி அடித்துக்கொண்டிருந்த சன் டிவி தற்போது வெளிநாட்டு தொலைக்காட்சிகளை பின்தொடர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று ஒரே வீட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தி யார் அழகி என்று தேர்தெடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிவருகிறார்.

- Advertisement -

கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடிலேயே இது எப்படிபட்ட நிகழ்ச்சி என்பது தெரிந்து விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை குடும்ப ரசிகர்கள் பார்க்க முடியாது என்று பலரும் குறை கூறிவந்த நிலையில் தற்போது அதற்கு போட்டியாக” சொப்பன சுந்தரி ” நிகழ்ச்சியில் போட்டியாளர்ர்கள் மிகவும் கவர்ச்சியில் எல்லை மீறி போய்கொண்டிருக்கின்றனர்.

Advertisement