சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதில் இருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீபகாலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார்கள். குறிப்பாக, தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை பார்க்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. மேலும், ஒவ்வொரு சேனலும் புது புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.. இதனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனலாக சன் டிவி திகழ்கிறது.
சன் டிவி சீரியல்:
அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் கயல், சிங்க பெண்ணே, மருமகள் போன்ற தொடர்கள் தான் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவியில் நடிக்கும் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
மதுமிதா:
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்து வந்தார். இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய எதிர்நீச்சல், சமீபத்தில் தான் திடீரென முடிக்கப்பட்டது. பெண்ணுரிமைக்காக போராடும் தொடராக இத்தொடர் இருந்தது. இவர் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
சைத்ரா ரெட்டி:
தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் ‘கயல்’. இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடிக்கிறார். இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
கேப்ரியல்லா செல்லஸ்:
டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் கேப்ரியல்லா. அதன் பின் இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தார். தற்போது சுந்தரி சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் .
ஆல்யா மானசா:
‘ராஜா ராணி’ தொடரின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளையடித்தவர் ஆல்யா. தற்போது இவர் சன் டிவியில் ‘இனியா’ என்ற தொடரில் நடித்திருக்கிறார். இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
ஸ்ருதி ராஜ்:
சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஸ்ருதி ராஜ். தற்போதையவர் ‘லக்ஷ்மி’ என்னும் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.