மகளுக்காக முக்கிய நகரத்தில் புதிய வீட்டை வாங்கி இருக்கும் சூர்யா ? – விலை மட்டும் இத்தனை கோடியா ?

0
406
Surya
- Advertisement -

மும்பையில் நடிகர் சூர்யா வாங்கி இருக்கும் வீட்டின் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

- Advertisement -

சூர்யா திரைப்பயணம்:

பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். ரசிகர்கள் மத்தியில் ரோலக்ஸ் கதாபாத்திரம் கொண்டாடப்பட்டு இருந்தது. அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி சமீப காலமாக சூர்யா நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. இதனை அடுத்து சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் வணங்கான் படத்தில் சூர்யா நடித்து இருந்தார்.

சூர்யா நடிக்கும் படங்கள்:

ஆனால், இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக சமீபத்தில் அறிக்கை வெளியாகி இருந்தது. இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். இப்படமானது 3d கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடித்து வருகிறார். அதோடு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

-விளம்பரம்-

மும்பையில் சொந்தமாக வீடு வாங்கிய சூர்யா:

இந்த நிலையில் மும்பையில் சூர்யா சொந்தமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறி இருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் கூட சூர்யா தன்னுடைய குழந்தைகளை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளிடம் கோரிக்கை வைத்திருந்தது இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மகளின் மேற்படிப்புக்காக இவர்கள் மும்பைக்கு சென்றதாகவும், மும்பையிலேயே சொந்தமாக வீடு வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீட்டின் விலை குறித்த தகவல்:

மேலும், சூர்யா வாங்கி இருக்கும் வீட்டின் விலை 70 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு கோடியில் சூர்யா வீடு வாங்கியதற்கு காரணம், தன்னுடைய அம்மா, அப்பா, கார்த்தி ஆகியோர் மும்பைக்கு சென்றால் அவர்களும் தங்குவதற்கு வசதியாக இருப்பதற்காக இந்த வீடு அதிக செலவில் சூர்யா வாங்கியதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சூர்யாவின் வீட்டுக்கு அருகே பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் வீடுகள் இருக்கின்றன.

Advertisement