என் படத்தை பாக்கிறீங்களா..?கேள்வி கேட்ட டாப்ஸி..!கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..!

0
146
taapsee

டாப்ஸி, தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தற்போது 30 வயதாகும் இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த படம் பிங்க்.

இந்த படத்தில் டாப்ஸியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கவர்ச்சியாக நடித்து காலத்தை ஓட்டாமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து அசத்தி வருகிறார் டாப்ஸி.இருப்பினும் தமிழில் அம்மணிக்கு எந்த படத்திலும் வாய்ப்பு வந்த வண்ணம் இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் ‘மில்க்’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிசில் பெரும் தோல்வியை தழுவியது இந்த படம்/. இருப்பினும் இந்த படத்தில் நடிகை டாப்ஸியின் நடிப்பு மிகவும் பாராட்டபட்டது.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 24) காலை ஜீ ஹிந்தி தொலைகாட்சியில் நடிகை டாப்ஸி நடித்த ‘மில்க்’ படத்தை ஒளிபரப்பினர். இதையடுத்து நடிகை டாப்ஸி, தனது ட்விட்டர் பக்கத்தில் , நான் ஜீ தொலைக்காட்சியில் மில்க்’ படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? என்று பதிவிட்டிருந்தார்.

Tapsee

இந்த டீவீட்டை கண்ட ட்விட்டர் வாசிகள், நாங்கள் பார்க்கவில்லை வேறு ஒரு நல்ல படத்தை பார்க்கிறேன் என்றும், உங்கள் படத்தை நான் பார்க்கவில்லை என்றும் கழுவி ஊற்றியுள்ளனர். இதனால் அம்மணி கொஞ்சம் அப்செட் அடைந்துள்ளார்.