வாலி முதல் நாராயணன் வரை – 12 நடிகர்களுக்கு பட்டப்பெயர் வர காரணம் இதுதான்.

0
1499
Actors
- Advertisement -

நடிகர்களின் பெயர்களுக்கு முன் பட்டப்பெயர் வந்ததற்கான காரணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் நடிகர்களுக்கு பட்ட பெயர் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். ரசிகர்களுக்கு ஒரு நடிகரை பிடித்து விட்டால் அவர்களை செல்லமாக பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அதன் மூலம் நடிகர்களுக்கு இருக்கும் ஆதரவும் தெரிந்துவிடும். அப்படி தமிழ் சினிமா உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயிருக்கிறது. இந்த நிலையில் பட்ட பெயர் வந்ததற்கான காரணம் குறித்த விவரத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

டெல்லி கணேஷ்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் தற்போது நகைச்சுவை ரோலில் நடித்து வருகிறார். மேலும், இவர் நாடக குழுவில் ஒரு உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார். அப்போது இவர் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இதனால்தான் இவருக்கு டெல்லி கணேஷ் என்று பெயர் வந்தது.

- Advertisement -

வாலி:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடலாசிரியரில் ஒருவர் வாலி. இவருடைய உண்மையான பெயர் பிஎஸ் ரங்கநாதன். இவர் இதுவரை 15000 பாடலுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவருக்கு திரை உலக பிரபலங்கள் மட்டும் இல்லாமல் எக்கச்சக்கமான மக்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒருவருடைய ரசிகர்,. அவருடைய பெயர் மாலி. இவர் ஒரு ஓவியர். இவரை போல தான் வர வேண்டும் என்பது வாலியின் ஆசையாம். அதனால்தான் இவருடைய பெயரை வாலி என மாற்றிக் கொண்டார்.

கவுண்டமணி:

தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக திகழ்ந்தவர் கவுண்டமணி. இவருடைய உண்மையான பெயர் சுப்பிரமணியன். இவர் மேடை நாடகங்களின் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி பின் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், இவரின் கவுண்டர் எல்லாம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனால் இவரை கவுண்டமணி என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

-விளம்பரம்-

நிழல்கள் ரவி:

தென்னிந்திய சினிமாவுலகில் பிரபலமான நடிகர்களில் ரவியும் ஒன்று. இவர் படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் கலக்கி கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆவார். இவருடைய உண்மையான பெயர் ரவி. இவர் நிழல்கள் படத்தில் நடித்ததால் இவருடைய பெயர் நிழல்கள் ரவி என்று மாறியது.

வெண்ணிறாடை மூர்த்தி, வெண்ணிறாடை நிர்மலா:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் வெண்ணிறாடை என்ற படத்தில் நடித்ததன் முலம் தான் இவருக்கு வெண்ணிறாடை மூர்த்தி, வெண்ணிறாடை நிர்மலா என்ற பெயர் வந்தது

ஓமக்குச்சி நரசிம்மன்:

இவருடைய உண்மையான பெயர் நரசிம்மன். இவர் ஒல்லியாக இருப்பதால் இவரை அனைவரும் ஓமக்குச்சி நரசிம்மன் என்று அழைத்தனர்.

குண்டு கல்யாணம்:

இவர் சில படங்களில் நகைச்சுவை இடத்தில் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை. இவர் பார்ப்பதற்கு குண்டாக இருப்பதால் இவரை அனைவரும் குண்டு கல்யாணம் என்று அழைத்தனர்.

ஒருவிரல் கிருஷ்ணாராவ்:

இவர் ஒரு விரல் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனால் இவரை எல்லோரும் ஒரு விரல் கிருஷ்ணாராவ் என்று அழைத்தார்கள்.

பசி நாராயணன்:

இவர் நாராயணன் என்ற படத்தில் நடித்ததால் இவரை பசி நாராயணன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

போஸ் வெங்கட்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் நடிகர் மட்டும் மட்டும் இல்லாமல் இயக்குனர் ஆவார். இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் வெங்கட் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு தான் இவரை அனைவரும் போஸ் வெங்கட் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆடுகளம் நரேன்:

இவருடைய உண்மையான பெயர் நாராயணன். இவர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்ததால் அதன் பிறகு இவரை பலருமே ஆடுகளம் நரேன் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

Advertisement