0
758
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களின் விவாதம் தான் சமூக வலைத்தளத்தில் தீயக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படம் குறித்தும் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

சமூக வலைதளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது இல்லை. இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் தொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிலீஸ் தொடர்பாக ஏற்பட்ட மோதல் தற்போது வசூல் குறித்து தொடர்கிறது.

- Advertisement -

அதுபோக ட்விட்டரில் இரண்டு தயாரிப்பு நிறுவனத்திற்கும் போட்டி நிலவியது. பின்னர் மரண மாஸ் பேட்ட vs கொல மாஸ் விஸ்வாசம் என்ற போட்டி வேறு. இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என பல விஷயங்கள். ரசிகர்கள், திரை அரங்க நிர்வாகிகள், விநியோகிஸ்தர்கள் என பல கருத்துக்கள் நிலவியது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்ட மற்றும் விஸ்வாசம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை. பேட்டயும், விஸ்வாசமும் சேர்ந்து வந்துள்ளன. இரண்டு பேரின் ரசிகர்களின் இந்த படங்களை தயவு செய்து கொண்டாடுங்கள். அன்பை பரப்பவும், வெறுப்பை அல்ல. ஒப்பீடுகளை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு அமோகமாக துவங்கியுள்ளது. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படக்குழுவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement