தன் புகைப்படத்தை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை வித்யுலேகா !

0
1522
- Advertisement -

நீ தானே என் போன் வசந்தம், வேதாளம், வீரம், ஜில்லா, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகையாக நடித்தவர் வித்யூ லேகா ராமன். இவர் சமீபத்தில் தன்னை கவர்ச்சியாக படங்கள் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், இது தான் நான், நான் வெறும் காமெடி நடிகை மற்றும் கிடையாது. என்னால் இது போன்ற கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என பதிவிட்டிருந்தார். அவர் பார்க்க சற்று பருமனாக இருப்பதால் அந்த போட்டோக்களை போட்டவுடன் பலரும் கலாய்க்க துவங்கினர். சிலர் திட்டவும் செய்தனர். அந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் வித்யூலேகா.

ஆம், நான் ப்ளஸ் சைஸ் தான், அது தான் என்னை பெண்ணாக வைத்துள்ளது. சாதாரண ஒரு காமன் கேர்ளின் பிரதிநிதி தன் நான். ட்விட்டரில் என்னை கண்டபடி திட்டியவர்களுக்கு என்னைப் போன்று தன்னையே, நேசிக்கும் ஒருவரை பிடிக்காது போல.
அதற்காக நான் கவர்ச்சியாகி நடிப்பேன் என்று கூறவில்லை, வித்யாபாலன் நடித்த கஹானி போன்ற ரோலில் எந்நாளும் செய்ய முடியும். அவை தான் என்னை பெண்ணாக காட்டும். இப்படி இருப்பது தான் என் வெற்றி.என விமர்சகர்களுக்கு தடாலடியாக பதிலடி கொடுத்தார் வித்யூ.

Advertisement