42 வயது விஜய் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை கிண்டல் செய்த ரசிகர்கள்.!

0
117
Actor-vijay
- Advertisement -

திரைப்பட நடிகைகளை பொறுத்த வரை பெரும்பாலானோர் கவர்ச்சிக்கு என்றுமே நோ சொன்னது இல்லை. அதிலும் இந்தி நடிகைகளை எடுத்துக் கொண்டால் கவர்ச்சி என்று வந்துவிட்டால் வயது வித்தியாசம் பார்க்காமல் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் 40 வயதை கடந்த பிரபல இந்தி நடிகை அமீஷா படேல் கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். 42 வயதை கடந்துள்ள இந்தி நடிகையான இவர் பாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்டார்.

- Advertisement -

இந்தி திரையுலகில் 15 வருடங்களுக்கு மேலாக காலூன்றி வரும் அமீஷா படேல் தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படத்தில் நடித்த தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானார். இவர் நடித்த முதல் மற்றும் கடைசி தமிழ் படமும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை அமீஷா படேல் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை அமீஷா படேல் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சி புகைபடங்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அமீஷா படேல்.

Advertisement