உலகளவில் விருது.! மெர்சல் சாதனை.! 50 கோடியாக எகிறிய சம்பளம்.! உட்சத்தை தோட்ட தளபதி.!

0
88
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த படம் வெளியான பின்னர் ஒரு சில அரசியில் பிரபலங்கள் செய்த பிரச்சனையால் இந்த படம் மேலும் ஹிட் அடைந்தது.

சமீபத்தில் விஜய் டீவியால் நடந்தபட்ட விஜய் அவார்ட்ஸ் விழாவில் “மெர்சல்” படத்தை இயக்கிய அட்லீக்கு அபிமான இயக்குனர் என்ற விருதும், விஜய்க்கு அபிமான நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் பல அங்கீகாரங்கள் கிடைத்திருந்தது.

- Advertisement -

விஜய்யின் புகழ் மெர்சல் படத்திற்கு பிறகு அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு 30 கோடி ருபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மெர்சல் படத்திற்கு சர்வ\தேச அளவில் கிடைத்து வரும் பல்வேறு அங்கீகாரத்தாலும், விருதுகளாலும் நடிகர் விஜய்யின் புகழ் சர்வதேச அரங்கிலும் கொடி கட்டி பறந்து வருகிறது. இதனால் நடிகர் விஜய்யின் சம்பளம் 50 கோடியாக உயர்ந்துள்ளது. நடிகர் விஜய்க்கு 50 கோடி சம்பளம் கொடுத்து நடிக்கவைக்கவும் பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Mersal

சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சர்வேதேச அளவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு சிறந்த நடிகர்கள் பட்டியலில்’மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்றிருந்தனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றுள்ளது நடிகர் விஜய் மட்டும் தான். இந்நிலையில் விஜய், கென்னத் ஓகோலி, டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்‌ஷன் ஆகியோரின் பெயர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த விடயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.மேலும், இந்த விழா வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement