அதனால எங்களுக்கு அந்தப் பொண்ணு மேலயும் கோபம் – குற்றவாளிகள் அளித்த பகீர் வாக்குமூலம்.

0
6723
jayasree
- Advertisement -

விழுப்புரம் சிறுமியை தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை விட இந்த வழக்கில் கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் பகுதிக்கு அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42). இவர் மனைவி ராஜி. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். ஜெயபால் அவர்கள் கூலி வேலை செய்து வருபவர். அதோடு இவர் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஜெயபாலும் அவரது மனைவியும் வெளியே சென்று உள்ளார்கள்.

-விளம்பரம்-

அந்த நேரத்தில் வீட்டில் மூத்த மகளான ஜெயஸ்ரீ (15) மட்டும் உள்ளார். பின் திடீரென்று ஜெயபால் வீட்டிற்குள்ளிருந்து புகை கிளப்பியது. உடனே அலறல் சத்தமும் கேட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜெயபாலின் வீட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கே சிறுமி ஜெயஸ்ரீ உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

ஆனால், 90% ஜெயஸ்ரீ கருகிய நிலையில் இருந்தது. பின் சிறுமி ஜெயஸ்ரீ அவர்கள் கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டது. இது குறித்து முருகன் மற்றும் கலியபெருமாள் இடம் கேட்டதற்கு அவர்கள் கூறி இருப்பது, ஜெயபால் குடும்பத்துக்கும் எங்களுக்கும் 7 வருஷமாக பிரச்னை இருந்து கொண்டு உள்ளது.

விழுப்புரம் சிறுமியின் வீடு

அதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்படி ஒரு முறை எங்கள் நிலத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தை ஜெயபால் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து சம்பாதித்து வந்தார். அதனால் அவர்மேல் எங்களுக்கு இன்னும் கோபம் அதிகமாயிற்று. அந்தப் பிரச்னையால் தான் நான்கு மாசத்துக்கு முன்னாடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நாங்கள் ஜெயபாலையும் அவரது மனைவியையும் அடித்தோம். மேலும், எங்களுக்குள் எப்ப பிரச்னை வந்தாலும் ஜெயபாலோட பெரிய பொண்ணு ஜெயஸ்ரீ எங்களிடம் அதிகமாக சண்டை போடுவார். அதனால எங்களுக்கு அந்தப் பொண்ணு மேலயும் கோபம் அதிகமாயிற்று.

-விளம்பரம்-

அதனால் நாங்கள் ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி வீட்டுக்குள் கொண்டு போனோம். பின் கை, கால்களை துணியாலேயே கட்டி அங்கு இருந்த மண்ணெண்ணெயை அந்தப் பொண்ணு மேல ஊத்தி உயிரோட கொளுத்தி விட்டு வந்துட்டோம் என்று கூறினார்கள். இவர்கள் அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்து உள்ளனர். முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அறிவித்தனர்.

Advertisement