பொய் வழக்கு, தப்பான பட்டம்! 70 படங்களுக்கு மேல் நடித்த வினிதாவின் தற்போதைய நிலை !

0
3109
vinitha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் அப்போதே படு கவர்ச்சியாக நடித்தவர் நடிகை வினிதா. 1978ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 39 வயதாகிறது. தமிழ் சினிமாவில் 1993ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சுகன்யா நடிப்பில் வெளிவந்த சின்ன ஜமீன் படத்தில் நடித்து நல்ல பெயர் பெற்றார்.
Vineetha அதன் பிறகு பல படங்களில் இவருக்கு ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கலக்கிய வினிதா எப்போதும் கவர்ச்சியாகவே நடித்தார். கார்த்தி சரத்குமார் விஜயகாந்த் உள்கிட்ட முன்னணி நடிகர்களுடன் அப்போதே நடித்து பெயர் பெற்றார். கட்ட பொம்மன், வியட்நாம் காலனி உள்ளிட்ட படங்கல் இவருக்கு திரையுலகில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் அவரிடம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது கவர்ச்சி மட்டுமே.

இதனால், வெறும் கவர்ச்சி ஹீரோயினாகவே கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 70 படங்களுக்கு மேல் நடித்தார். 1999ஆம் ஆண்டு அப்போதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்ரவர்த்தியுடன் ஒரு படம் நடித்தார்.
ஆனால் இவரது சோக காலம் என்னவென்றால் 2002ஆம் ஆண்டு தவறுதலாக விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் வினிதா. அதுவும் தனது அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இதற்கு உடந்தை எனக்கூறி போலீஸ் கைது செய்தது.

நீமன்றத்தில், ‘அதிர்ச்சியடைந்த நீதிபதி, 70 படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகை எப்படி விபச்சார வழக்கில் அம்மா மற்றும் தம்பியுடன் கைதாவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை எனக் கூறி அதிர்ச்சியளித்தார் நீதிபதி.
vineethaஆனால், இரண்டு வருடம் கழித்து தீர்ப்பு வினிதாவிற்கு சாதகமாக வந்தது. அவர் தப்பு செய்யவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் எனது குடும்பத்தில் அனைவரும் மன உளைச்சல் அடைந்ததாக வினிதா கூறினார்.

- Advertisement -

கடைசியாக 2009ல் நேற்று போல இன்று இல்லை என்ற ஒரு தமிழ் படத்தில் நடித்தார். தற்போது மலையாள சீரியலில் நடித்து வரும் அவர் நல்ல கதைகள் வந்தால் நடிக்க தயாராக உள்ளார்.

Advertisement