மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் கதையில் விஷ்ணு விஷால் – எப்படி இருக்கிறது ‘கட்டா குஸ்தி’ ? – முழு விமர்சனம் இதோ

0
962
kattakusthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷ்ணு விஷால். தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கட்டா குஸ்தி. இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரவி தேஜா, ஐஸ்வர்யா லட்சுமி, முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். குஸ்தி சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இன்று வெளியாகிருக்கும் கட்டா குஸ்தி படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சிறு வயதிலேயே விஷ்ணு விஷாலின் அப்பா, அம்மா இறந்து விடுகிறார்கள். விஷ்ணு விஷாலுக்கு ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் கருணாஸ் உடன் நட்பு ஏற்படுகிறது. அப்போது அவர் சந்திக்கும் பிரச்சினைகளை தான் உலகம் என்று வாழ்கிறார். அது மட்டும் இல்லாமல் பெண் என்பவள் ஆணுக்கு கீழ்தான். ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு இருப்பவர் கருணாஸ். அதை விஷ்ணு விஷாலுக்கும் புகுத்துகிறார்.

- Advertisement -

இதனால் விஷ்ணு விஷால் தனக்கு வரும் பெண் அதிகமாக படித்திருக்கக் கூடாது, முடி நீளமாக இருக்க வேண்டும் என்று பல கண்டிஷன்கள் போடுகிறார். இந்த கண்டிஷனோடு விஷ்ணு விஷாலுக்கு பெண் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் கட்டா குஸ்தி விளையாட்டில் திறமை வாய்ந்தவராக இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் கட்டா குஸ்தி போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இதனால் இவருக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் கிடைக்கிறது.

படத்தின் கதை:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஐஸ்வர்யாவின் சித்தப்பாக வரும் முனிஸ்காந்த் சில பொய்களை சொல்லி விஷ்ணு விஷாலுக்கு ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், முனிஸ்காந்த் சொன்ன பொய்கள் எல்லாம் விஷ்ணுக்கு தெரிய வருகிறது. அதற்குப்பின் என்ன நடக்கிறது? ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டா குஸ்தி கனவு ஜெயித்ததா? இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா? என்பதே தான் படத்தின் மீதி கதை. படத்தில் வீரா என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

எஃப் ஐ ஆர் படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷாலுக்கு நல்ல ஒரு படமாக கட்டா குஸ்தி அமைந்திருக்கிறது. படத்தில் சொகுசாக, தெனாவட்டாக சுற்றி தெரியும் வாலிபனாக இருக்கிறார் விஷ்ணு. ஆனால், சில இடங்களில் விஷ்ணு செய்யும் காமெடிகள் பெரிய அளவு ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தில் பெயருக்கு தான் விஷ்ணு விஷால் கதாநாயகன். ஆனால், உண்மையிலேயே படத்தின் கதாநாயகன் என்று பார்த்தால் கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி தான். இந்த படத்தில் அவர் ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.

படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி:

முதல் பாதையில் குடும்பம் சொன்ன பொய்யை மறைக்க ஐஸ்வர்யா லட்சுமி செய்யும் தில்லாலங்கடி வேலை எல்லாம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பின் தன்னுடைய கணவரின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் ரவுடிகளை பொளந்து கட்டும் காட்சிகள் எல்லாம் திரையரங்களில் கிளாப்ஸ் கொடுத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் தன்னுடைய கௌரவம், சுயமரியாதைக்கு ஏற்படும் இழுக்கு, கணவனுக்கு எதிராக போட்டியிடுவது போன்ற எல்லா காட்சிகளிலுமே ஐஸ்வர்யா லட்சுமி தூள் கிளப்பி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பெண்களை அடிமைகளாக நினைக்கும் எண்ணத்தை மாற்ற முயற்சிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவரை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் சிரிக்கும் வகையிலும், சிந்திக்கும் வகையிலும் படத்தை கையாண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. முதல் பாதியில் காமெடியை சில இடங்களில் தவித்திருக்கலாம். இரண்டாம் பாதையில் பெண்களை அடிமையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு சொல்லும் மெசேஜாக கொண்டு சென்றிருக்கிறார். வசனங்களும் அருமையாக இருக்கிறது. ஆனால், விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தை கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு கமர்சியல், காமெடி, என்டர்டைன்மென்ட் படமாக கட்டா குஸ்தி இருக்கிறது.

நிறை:

ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு சிறப்பு.

கதைக்களம் நன்றாக இருக்கிறது.

இரண்டாம் பாதி அருமை.

பெண் அடிமை தனத்தை குறித்து சொல்லும் மெசேஜ்.

குறை:

காமெடிகள் சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகவில்லை.

விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

பாடல்கள் பெரிதாக செட்டாகவில்லை.

முதல் பாதி பொறுமையாக சென்று இருக்கின்றது.

இறுதி அலசல்:

மொத்தத்தில் கட்டா குஸ்தி- ரசிக்கலாம்

Advertisement