பிரம்மாண்டமாக நடந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் – விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ

By subhashini · 1/9/2025

விஜய் டெலிவிஷன் அவார்ட் 2025 ஆம் ஆண்டிற்கான விழாவில் விருது வாங்கியிருக்கும் தொடர்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக மக்களின் மத்தியில் பிரபலமான சேனலாக விஜய் டிவி திகழ்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதனாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்க்கும் சேனலாக விஜய் டிவி உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து தான் செல்கிறார்கள். அந்த அளவிற்கு பல கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. மேலும், வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ்.

விஜய் டிவி விருது விழா:

ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் விருது விழா கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டும். சினிமா துறை கலைஞர்களை கெளரவித்தும் வருவது போல் விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள், கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் டெலிவிஷன் விருது விழா:

கடந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விழா கூட சிறப்பாக நடந்து இருந்தது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் 10வது விஜய் டெலிவிஷன் விருதுகள் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. அதில்,

விருது வாங்கியவர் பட்டியல்:

பைண்ட் ஆப் தி இயர்- அய்யனார் துணை சீரியல் கதாநாயகன் அரவிந்த் கதாநாயகி மதுமிதா

சிறந்த ஜோடி -மகாநதி சீரியலில் விஜய்- காவேரி

budding pair - பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- ராஜி

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர் எஸ் சரவணன் அய்யனார் துணை

சிறந்த ஆண் கதாபாத்திரம் - அய்யனார் துணை சீரியல் சேரன் முன்னா

ஸ்பெஷல் அச்சீவ்மென்ட் - பாக்கியலட்சுமி சீரியல்

சிறந்து எழுத்தாளர் - பிரியா அய்யனார் துணை, பாக்கியலட்சுமி

ஃபேவரிட் காமெடி ஷோ - குக் வித் கோமாளி

சிறந்த கதாநாயகி - சிறக்கடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா

சிறந்த கதாநாயகன் - விஜய் மகாநதி

சிறந்த குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

சிறந்த மகன் - சின்ன மருமகள் சீரியல் நவீன்

சிறந்த மருமகள் - சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதா

சிறந்த பாட்டி - வி.ஆர். திலகம்

இந்த விருது விழாவில் அதிகம் அய்யனார் துணை சீரியல் தான் அதிக விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full