
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்கும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் சம்பத் அளித்துள்ள பேட்டியில், "விஜய் சாருக்கு இருக்கும் அதே சீரியஸ் பேஸ் ஒன்-லைனர் காமடி டைமிங் சென்ஸ் மற்றும் இயல்பான ஹியூமர் உணர்வு ஜேசன் சஞ்சயிடமும் இருக்கிறது, மேலும் சஞ்சய் மிகவும் எளிமையானவர் (Humble Person)" எனப் பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்தை வைத்து இயக்கவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதால் வேதனை அடைந்த இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு, இயக்குநர் அட்லீ தொலைபேசியில் அழைத்து நம்பிக்கை அளித்துள்ளார். “நீ ஒரு வெற்றிப்பட இயக்குநர், மனம் தளராதே” என்ற அட்லீயின் வார்த்தைகள் தன்னை மீண்டும் எழுச்சி பெறச் செய்ததாக சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், அட்லீ பெருமைப்படும் வகையில் தனது அடுத்த படத்தை உருவாக்குவேன் என்றும் கூறியுள்ளார்.

‘சிக்மா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். படத்தின் கதையை இயக்குநர் இரண்டரை மணி நேரம் விவரித்தபோது, அப்படியே விஜய் அண்ணாவைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக சூரி தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து பேசியுள்ளார். சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது விஜய் தொலைபேசியில் அழைத்து நன்றி கூறியதாகவும், விஜய் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது அழைப்பு தனக்கு எதிர்பாராததாக இருந்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. பிறர் கூறும் கருத்துகளுக்காக இலக்கை மாற்றிக்கொள்ளக் கூடாது என்றும், சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லலாம் என்றும் அட்லீ குறிப்பிட்டார். இதனை விளக்கும் வகையில் கழுதை மற்றும் துணி மூட்டை தொடர்பான கதையையும் அவர் பகிர்ந்தார். மேலும் தனது திரையுலகப் பயணம், நடிகர் விஜயின் ஆதரவு, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்கள் குறித்தும் அட்லீ பேசினார்.

நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து தெலுங்கு நடிகர் நானி பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய்க்கும் தமிழக மக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நம்பிக்கை உருவாகியுள்ளதாக கூறிய நானி, இணையத்தில் பார்த்த வரையில் விஜய் சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

சூர்யா–ஜோதிகா தங்களது 20வது திருமண நாளை குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டாடியுள்ளனர். இந்த சிறப்பு தருணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில், தொகுப்பாளினி டிடியின் சுவாரஸ்யமான கமெண்ட்டும், அதற்கு ஜோதிகா அளித்த ஜாலியான பதிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேசன் சஞ்சய்க்கு ஹீரோ ஆகனும்ன்னு எல்லாம் ஆசை இல்லை...ஆனால் அது ஒருநாள் நடக்கலாம் - நடிகர் சம்பத் ராஜ்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மர்மமான கொலைகள், அவற்றின் பின்னணியில் இருக்கும் சைக்கோ கொலையாளி யார் என்ற கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம், மர்மம் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் அம்சங்களுடன் பார்வையாளர்களை பயணிக்க வைக்கிறது. திருப்பங்கள், சந்தேகங்கள் மற்றும் கிளைமாக்ஸ் நோக்கிய எதிர்பார்ப்பு ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

‘சண்டைக்கோழி’ படத்தின் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் இயக்குநர் லிங்குசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக இருப்பதாகவும், அதைத் தாண்டி ஹீரோவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றும் கருதி விஜய் அந்தக் கதையை மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஷால் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தன்னை பாராட்டியதாகவும் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

“மண்டாடி” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி, படத்திற்காக தான் எதிர்கொண்ட கடினமான அனுபவங்கள் குறித்து உருக்கமாக பேசினார். குறிப்பாக இரண்டு மாதங்கள் கடலில் நடைபெற்ற படப்பிடிப்பு, தனது சினிமா பயணம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பு குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் கவனம் பெற்றன. பா.விஜய்யின் பேச்சால் சூரி கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான தருணமும் விழாவில் இடம்பெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். அவரது திரைப்பணியை நினைவுகூரும் வகையில் உருவாகும் இந்த மணிமண்டபம், ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனக்கு பிடித்த வாழ்க்கைத்துணை குறித்து தெரிவித்ததாக வெளியாகியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, “Independent ஆன பெண் தான் எனக்கு பிடிக்கும்” என்ற அவரது கருத்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன், விஜயின் புகழை விட மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே மிகப்பெரியது என்று பாராட்டியுள்ளார். விஜயின் அரசியல் பயணம், ஆட்சி மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து சிலம்பரசன் தெரிவித்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. மேலும், தனது அரசியல் வருகை குறித்தும் காலம்தான் முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், எதிர்காலத்தில் 11 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறப்படும் பழைய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. இதனுடன் அவரது கடந்தகால உறவு மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த பேச்சுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தஞ்சையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் வாக்குவாதம் மற்றும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாய் கிரிசில்டா தனது மகன் ராகவுக்கு கோவிலில் மொட்டை அடித்துள்ளார். இந்த சிறப்பு நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய நடிகர் மம்மூட்டி, திருப்பத்தூர் அருகே வழிதவறியதாக கூறப்படும் சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது உள்ளூர் மக்களிடம் அவர் சகஜமாக வழி கேட்ட விதமும், அவர்களுடன் இயல்பாக பழகிய விதமும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

'கே.ஜி.எஃப்' நடிகர் யாஷின் 'டாக்ஸிக்' திரைப்பட டிரெய்லரில் பெண்களை மோசமாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி, கன்னட நடிகை ரிஷிகா சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சினிமாவில் பெண்களை மதிக்கத் தவறினால் கர்நாடகாவை விட்டு வெளியேற்றுவோம் என அவர் யாஷுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கையால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓலா, ரேபிடோ போன்ற செயலிகளில் பயணம் புக் செய்வதற்கு முன்பாக 'கூடுதல் டிப்ஸ்' வழங்கினால் மட்டுமே வண்டி உடனடியாக புக் ஆகும் நிலை இருந்தது. இதனால் டிப்ஸ் வழங்காத பயணிகளின் டிரைப்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, பயணம் தொடங்குவதற்கு முன்பே 'முன்பண டிப்ஸ்' வசூலிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. டிப்ஸ் என்பது பயணம் முடிந்த பிறகு விருப்பத்தின் அடிப்படையில் தரப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.