சமீபத்தில் நடைபெற்ற சூரி வீட்டின் இல்லத் திருமண விழாவில் நகை திருடிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் சில விசித்திரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூரியின் அண்ணன் மகளுக்கு திருமணம் நடைபெற்றுது. இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சீமான் என்று பல்வேரு பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமணமண்டபத்தில் நடந்தது.

இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு. வந்த மர்ம நபர் ஒருவர் மணமகள் அறையில்புகுந்து ஒன்பதரை பவுன் நகைகளை திருடி சென்றுள்ளான். இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் மண்டபத்தில் எடுக்கப்பட்ட வீடியோகளை ஆராய்ந்ததில் நகைகளை திருடி சென்ற விக்னேஷ் என்பவரை கைது செய்து உள்ளனர் விக்னேஷ்.

இதையும் பாருங்க : சர்வைவரில் இளசுகளை கவர்ந்த ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் குவிந்து கிடக்கும் பிகினி புகைப்படங்கள்.

Advertisement

அந்த திருடன் குறித்து விசாரணை நடத்தியதில் இவரது தந்தை பரமக்குடி பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். சரி நகை கடக்காரரின் மகன் ஏன் நகைகளை திருடினார். ஒருவேளை திருடி சென்று தன் தந்தை கடையில் விற்பாரோ என்று நீங்கள் நினைப்பது புரிகிறார். பட்டதாரி இளைஞரான விக்னேஷ் ஒரு விளம்பர பிரியர். சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய நான் அவர்களிடம் நெருங்கி பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு அதில் பெருமை கண்டு வந்திருக்கிறார் விக்னேஷ்.

அதேபோல முக்கிய பிரபலங்களின் இல்லங்களில் நடக்கும் சுப விசேஷங்களுக்கு அழையா விருந்தாளியாக கலந்துகொள்ளும் விக்னேஷ் அங்கு இருக்கும் பணம் மற்றும் நகை ஏதாவது திருடி தானாகவே மாட்டிக் கொள்வார் இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் இருக்கிறது. தான் திருடி மாட்டிக் கொள்ளும் செய்தி சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாளில் வரும் செய்திகளை சேகரித்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனக்கு விளம்பரத்தை தேடிக் கொள்வாராம் விக்னேஷ்.

Advertisement

இவர் மீது ஏகப்பட்ட திருட்டு வழக்குகள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் ஒரு பிரபலம் என்பதைப்போல ஊருக்குள் பந்தாவாக சுற்றி வருவாராம். அதுமட்டுமல்லாமல் இவர் வெளியூரில் தங்கி கொண்டு தன்னுடைய அப்பாவை தொடர்பு கொண்டு தன்னை காணவில்லை என்று புகைப்படத்துடன் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்குமாறு சொல்வார். அந்த அளவிற்கு ஒரு விளம்பர பைத்தியமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இவரது பெற்றோர்கள் இவரை மனநல மருத்துவமனை கூட அழைத்துச் சென்று அவருக்கு ஆலோசனை வழங்கியதாக போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார்கள்.

Advertisement
Advertisement