சென்னையில் கொடூரம் : மாஸ்டர் பட ஆசையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமி.

By Rajkumar · 21/1/2021

சென்னை நெற்குன்றத்தில் லேப்டாப்பில் மாஸ்டர் படம் காட்டுவதாக அழைத்துச் சென்று 13 வயது சிறுமியை 21 வயதான வினோத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் தொடக்க நாளில் கொரோனா இருந்தும் கூட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படத்தை கண்டுகளித்தனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தை காரணம் காட்டி 13 வயது சிறுமியை 21 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி மாஸ்டர் படத்தை பார்ப்பதற்காக தனது மனைவியுடன் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு சென்றிருக்கிறார். இந்த தம்பதியருக்கு 13 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். கணவன் மனைவி இருவரும் படம் பார்க்க சென்றதால் வீட்டில் இருந்த அந்த ஆட்டோ ஓட்டுனரின் தாயை தனது மகளைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் படத்திற்கு தன்னையும் அழைத்துச் செல்லும்படி பெற்றோர்களிடம் பிடித்துள்ளார் அந்த சிறுமி. ஆனால் அந்த சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு இருவரும் படம் பார்க்க சென்று இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் அந்த சிறுமிக்கு ஏற்கனவே பழக்கமான அதே பகுதியை சேர்ந்த 21 வயதான வினோத் என்பவர் செல் போனில் அந்தசிறுமியிடம் தொடர்பு கொண்டு பேசிய போது மாஸ்டர் படத்திற்கு தன்னை விட்டுவிட்டு சென்று விட்டதாக அந்த சிறுமி அவனிடம் புலம்பியுள்ளார். சிறுமியின் இந்த ஏக்கத்தை பயன்படுத்திக்கொண்டு உள்ள வினோத் தன்னுடைய லேப்டாப்பில் மாஸ்டர் படம் இருப்பதாகவும் வீட்டிற்கு வந்தால் இருவரும் சேர்ந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

இதனால் தோழி வீட்டிற்கு சென்று வருவதாக தனது பாட்டியிடம் பொய் சொல்லிவிட்டு வினோத் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த சிறுமி. இப்படி ஒரு நிலையில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அந்த சிறுமியின் பெற்றோர்கள் சிறுமி வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். பின்னர் மாலையில் தாமதமாக வீடு திரும்பிய சிறுமி பெற்றோர்களிடம் மாஸ்டர் காண்பிப்பதற்காக தன்னை வினோத் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது வினோத் தலைமறைவாக இருந்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full