2.0 இத்தனை சாதனை படைத்தும் விஜய்,அஜித்தின் இந்த படம் செய்த சாதனையை நெருங்க முடியவில்லை..!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த அளவில் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் அடுத்தக்கட்டம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
[embed]https://twitter.com/NikileshSurya/status/1068458734425231360[/embed]
மூன்றாம் நாள் முடிவில் இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. 2.0 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் வார முடிவில் 300 கோடி ரூபாய் வசூலை 2.0 திரைப்படம் குவிக்க வாய்ப்பு உள்ளதாக திரைப்பட வணிக ஆய்வாளர்கள் கூட தெரிவித்து வருகின்றனர்.
எப்போதும் ரஜினி படம் என்றாலே மற்ற நடிகர்களை விட எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அதிலும் ஷங்கர் - அஜித் காம்பினேஷன் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. ஆனால், 2.0 திரைப்படம் அஜித்தின் விவேகம் படம் பெற்ற எதிர்பார்ப்பை கூட பிரபல திரையரங்கில் பெறவில்லை.
ஆம், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கனா ரோகினி சினிமாஸில் இதுவரை வெளியான படங்களிலேயே விவேகம் படத்திற்கு தான் அதிக முன்பதிவு ஆகியுள்ளதாம்.அதற்கு அடுத்தபடியாக விஜயின் மெர்சல் இரண்டாவது இடத்திலும், பாகுபலி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. 2.0 திரைப்படம் நான்காவது இடத்தில் தான் உள்ளது என்று ரோகிணி திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.