சென்னையில் வாழ்நாள் சாதனை செய்த 2.0...!டாப் 5 இடத்தில் விஜய் அஜித் படங்கள் எங்கே?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாரான 2.0 திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம் என்று போற்றப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷேய் குமார், ரியாஸ் கான், கைஸாட் கோட்வால்,மயூர் பனிஸ்வால் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 545 ரூபாய் கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் நாள் புக்கிங் மிக மந்தமாக இருந்தது என்று கூறப்பட்டது. ஆனால், சென்னையில் இந்த படம் புதிய சாதனை ஒன்றை படைத்துளது. இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே முதல் நாளில் சென்னையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் தான் இந்த சாதனையை தக்க வைத்திருந்தது. விஜய்யின் சர்கார் திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 2.37 கோடியை வசூல் செய்திருந்தது. தற்போது ரஜினியின் 2.0 திரைப்படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.64 கொடியாய் வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்கள் 1. 2.0 - 2.64 கோடி 2. சர்கார் - 2.37 கோடி 3. காலா - 1.76 கோடி 4. மெர்சல் - 1.52 கோடி 5. விவேகம் - 1.12 கோடிChennai city all-time Top5 opening day grossers, 1 #2Point0 - 2.64 CR 2 #Sarkar - 2.37 CR 3 #Kaala - 1.76 CR 4 #Mersal - 1.52 CR 5 #Vivegam - 1.21 CR
— Kaushik LM (@LMKMovieManiac) November 29, 2018