22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா : 4 பிரிவுகளில் விருதுகளை அள்ளிய அமரன் - முழு பட்டியல் இதோ
சர்வதேச திரைப்பட விழாவின் விருது பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் வருடம் வருடம் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி இருந்தது. இந்த விழா கடந்த 19ஆம் தேதி வரை நடந்திருக்கிறது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த விருதுகள் பட்டியல் தான் இங்கு பார்க்க போகிறோம்.
சிறந்த படம்:
அமரன் படம் தேர்வாகியிருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் தான் அமரன். இந்த படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்தது. இதற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகிய இருவருக்குமே விருது உட்பட தல ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இரண்டாவது சிறந்த படம்:
இரண்டாவது சிறந்த படத்துக்கான விருதை 'லப்பர் பந்து' வாங்கி இருக்கிறது. இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியிருந்த லப்பர் பந்து படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்காக இயக்குனர் தமிழரசன் மற்றும் தயாரிப்பாளர் லட்சுமணன் ஆகியோருக்கு விருது மற்றும் தல ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்பெஷல் ஜூரி விருது:
ஸ்பெஷல் ஜூரி விருது ஜமா படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பாரி இளவழகனுக்கு விருது மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
சிறந்த பொழுதுபோக்கு படம்:
சிறந்த பொழுதுபோக்கு படமாக வேட்டையன் தேர்வாகி இருக்கிறது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சிறந்த நடிகர்:
சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார். மகாராஜா படத்துக்காக தான் இந்த விருது வழங்கப்பட்டது. இது விஜய் சேதுபதியினுடைய ஐம்பதாவது படம். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூல் சாதனையும் செய்திருக்கிறது.
சிறந்த நடிகை:
சிறந்த நடிகைக்கான விருதை அமரன் படத்தில் இந்து ரெபக்கா வர்க்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஃபேவரட் நடிகர்:
பேவரட் நடிகருக்கான விருதை அரவிந்த்சாமி வாங்கி இருக்கிறார். கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படத்திற்காக தான் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஃபேவரட் நடிகை:
ஃபேவரட் நடிகை விருதை அன்னா பென்னா வாங்கி இருக்கிறார். இவர் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியாகியிருந்த கொட்டுக்காளி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
சிறந்த ஒளிப்பதிவாளர் - சாய் (அமரன்)
சிறந்த படத்தொகுப்பாளர் - பிலோமின் ராஜ் (மகாராஜா)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் (வாழை)
சிறந்த குணச்சித்திர நடிகர் - அட்டகத்தி தினேஷ் (லப்பர் பந்து)
சிறந்த குணச்சித்திர நடிகை - துஷாரா விஜயன் (வேட்டையன்)
சிறந்த எழுத்தாளர் - நிதிலன் சுவாமிநாதன் (மகாராஜா)
சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ் குமார் (அமரன்)
சிறந்த கலை இயக்குனர் - எஸ்.எஸ்.மூர்த்தி (தங்கலான்)
சிறந்த சமூக படம் - நந்தன்
ஸ்பெஷல் ஜூரி விருது - மாரி செல்வராஜ் (வாழை)
ஸ்பெஷல் ஜூரி விருது - பா.இரஞ்சித் (தங்கலான்)
ஸ்பெஷல் ஜூரி விருது - சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை)
ஸ்பெஷல் ஜூரி விருது - யோகிபாபு (போட்)
அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது - அருள்நிதி
சிறந்த குறும்படம் - கயமை
நம்பிக்கை நட்சத்திரம் விருது - அர்ஜுன் தாஸ் (ரசவாதி)