தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றி இருந்தார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருந்தார் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் இவர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார். பின் எஸ் ஜே சூர்யா சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” படத்தை ” இயக்கி இருந்தார்.

வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார். வாலி படத்தை போன்று இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். விஜய் படங்களில் முதன் முறையாக அதிக வசூல் செய்தது இந்த திரைப்படம் தான். ‘

Advertisement

இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 23 வருடங்கள் ஆனதையொட்டி ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் #21YearsOfEvergreenKushi என்ற ஹேஷ் டேக்கை போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போது நடந்த ஸ்வாரசியான விஷயத்தை பற்றி பார்க்கலாம். குஷி படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார் எஸ்.ஜே. சூர்யா. பின் அவர் பத்திரிக்கைகளை சந்திக்கும் ஏற்பாடு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

மேலும், அதில் அவர் குஷி படத்தின் கதையை டாப் to பாட்டம் வரை அழகாக அவர்களிடம் கூறி விட்டார். மேலும், இந்த படத்தை எழுதி,நானே இயக்கி உள்ளேன் என்று அறிவித்திருந்தார். மேலும், இந்தத் திரைக் கதைக்கு சமமாக யாராலும் கொடுக்க முடியாது என்று ஓப்பன் சேலஞ்ச் அளித்து இருந்தார். ஆனால், என்ன ஒரு நல்ல விஷயம் என்று பார்த்தால் அப்போது எந்த ஒரு சமூக வலைத்தளங்களும் இல்லை.

Advertisement

இருந்திருந்தால் படத்திற்கு முன்பே கதையை சொல்லிவிட்டதால் படத்தின் மீது எதிர்பரப்பு குறைந்து பிளாப் ஆகி இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவருக்கு முன்னரே இந்த படத்தை வேறு யாராவது கூட எடுத்திருந்தது இருப்பார்கள் என்பது தான் உண்மை. அதே போல இந்த படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகாவை அவரது தந்தை செல்வி சென்று தான் அழைப்பார். செல்வி என்பது எஸ் ஜி சூர்யாவின் அக்காவின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் ஜி சூர்யாவின் தந்தை அப்படி தான் அழைப்பாராம். அதனை மனதில் வைத்து தான் ஜோதிகாவிற்கு செல்வி என்ற பெயரையும் வைத்துள்ளார் எஸ் ஜி சூர்யா. அதை போல இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் படு ஹிட் அடித்தது. மொட்டு ஒன்று, ஓ வெண்ணிலா பாடல்கள் மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஒரு போர்த்துகீசிய பாடலின் காபி என்று விமர்சனங்கள் எழுந்தது.

இதுகுறித்து பேசிய தேவா ‘மொட்டு ஒன்று, ஓ வெண்ணிலா பாடல்களில் முறையே மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஒரு போர்த்துகீசிய பாடலின் தாக்கம் இருக்கும் எந்த இசையமைப்பாளருக்குமே இன்னொருவர் போட்ட மெட்டை அப்படியே போடுவதில் உடன்பாடு கிடையாது. அதற்குப் பதில் புதிதாக ஒரு மெட்டை உருவாக்கத்தான் விரும்புவார்கள். நானும் அப்படி தான் சொன்னேன் ஆனால், எஸ் ஜே சூர்யா விடவில்லை. சில நேரங்களில் இயக்குனர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த பாடல்கள் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement