முதல் ABC Trio - இதே நாளில் 25 ஆண்டுக்கு முன் தான் அறிமுகமான அஜித் படம் குறித்து பரத்வாஜ் போட்ட உருக்கமான பதிவு.
அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் பரத்வாஜ் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும் சமீப காலமாகவே அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படங்கள் எல்லாம் பட்டைய கிளப்பி இருக்கிறது.
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியார் நடித்து இருந்தார்.
அஜித் திரைப்பயணம்:
துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. மேலும், இப்படத்துடன் ஒன்றாக விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கண்டிராத கெட்டப்பில் அஜித் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். மேலும், வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருந்தார்.
https://twitter.com/BharadwajRamani/status/1632953252269502470?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1632953252269502470%7Ctwgr%5E91434c1cec110117e29b140b63e70c32a98a5780%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fcmsadmin.maalaimalar.com%2Fmain.jspகாதல் மன்னன் படம்:
இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று காதல் மன்னன். இந்த படம் 1998 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமார், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை சரண் இயக்கி இருந்தார்.
பரத்வாஜ்-சரண்-அஜித் கூட்டணி:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் திரை பயணத்தில் காதல் மன்னன் படம் ஒரு மையில் கல்லாக இருந்தது என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சரண் இயக்கிய பல படங்களுக்கு பரத்வாஜ் தான் இசையமைத்திருந்தார். அதன் பின்னர் சரண்- அஜித்- பரத்வாஜ் கூட்டணியில் அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற பல படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தது.
பரத்வாஜ் பதிவு:
இந்த நிலையில் காதல் மன்னன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் பரத்வாஜ் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், காதல் மன்னன் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. தமிழில் என்னுடைய முதல் படம். அதுவும் அஜித் குமாருக்கு என்னுடைய முதல் படம். A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்… கொண்டாடிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.