இதே தேதியில் 29 ஆண்டுக்கு முன் விஜய் அறிமுகமான அதே படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய நிலை
தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக அறிமுகம் ஆகி இன்று தளபதி என்ற அந்தஸ்துடன் இருக்கும் நடிகர் விஜய். தனது திரை பயணத்தில் 29 ஆண்டுகளை எட்டியுளளார். இதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில் ட்விட்டரில் 29YearsOfVIJAYSupremacy என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் முதன் முதலாக நடித்த படம் நாளைய தீர்ப்பு. இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நாளைய தீர்ப்பு. இந்த படம் மூலம் தான் விஜய் அவர்கள் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் கீர்த்தனா, ஸ்ரீவித்யா, ராதா ரவி, சரத்பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படம் வெளிவந்த போது தளபதி விஜய்யை பலரும் பலவிதமாக கிண்டல் கேலி செய்து இருந்தார்கள்.
இருந்தும் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் அவர்கள் இன்று ஒட்டுமொத்த தமிழ் திரை உலகில் தளபதியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த படம் வெளியாகி 29 வருடங்கள் முடிவடைந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் எல்லோரும் சோசியல் மீடியாவில் இந்த படத்தை ஹாஸ்டேக் செய்து பாராட்டியும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தனா நடிந்து இருந்தார். பலருக்கும் இவரை பற்றி தெரியாது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
பின் படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவரும் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தற்போது இவர் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் தொலைக்காட்சி தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ரோஜா, திருமதி ஹிட்லர் போன்று பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.