பிரபல இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்யும் பிக் பாஸ் ரக்ஷிதா- உண்மையை உடைத்த பயில்வான்

By ·

பிக் பாஸ் ரக்ஷிதா இரண்டாவது திருமணம் கொள்ள இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு கலர்ஸ் தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் கமிட்டானார்.

ரக்ஷிதா நடித்த சீரியல்கள்:

இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு நடித்து இருந்தார். சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது. இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை திடீரென்று முடித்து விட்டார்கள். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.

ரக்ஷிதா குடும்பம் குறித்த தகவல்:

இருந்தாலும், ரொம்ப சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி மீது யார் கண்ணு பட்டதோ தற்போது இருவரும் பிரிந்து தனியாக வாழ்கிறார்கள். இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதிலும், குறிப்பாக தினேஷிற்கு சமீப காலமாக சீரியலில் வாய்ப்பு இல்லாததால் தான் ரஷிதா அவரை பிரிந்து விட்டார் என்றும் கூறிவந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிய முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் ரட்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா:

இந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டருடன் இவர் நெருங்கி பழகியிருந்தது குறித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ரக்ஷிதா அவரை ஒரு நண்பராக பார்த்ததாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடிகரும், விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

ரக்ஷிதா காதல்:

அதில் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா கலந்து கொண்டிருந்தபோது அவர் பின்னாடியே ராபர்ட் மாஸ்டர் சுற்றி திரிந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், நிகழ்ச்சிக்கு பிறகும் ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை திரும்பி கூட பார்க்கவில்லை. ஆனால், பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை ரக்ஷிதா நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருக்கிறார். அவரை தான் ரக்ஷிதா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா காதலிக்கும் இயக்குனர் யார்? என்றும் கேட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full