போட்டோ எடுப்பதில் கின்னஸ் சாதனை செய்த ரோஜா , குவியும் வாழ்த்துகள் - இதான் விஷயம்.

By subhashini · 31/7/2022

போட்டோ எடுப்பதில் நடிகை ரோஜா கின்னஸ் சாதனை படைத்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : 'லைப்பா தொலைச்சிட்டயேடா' - வைரலாகும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் மீம்ஸ். இதான் காரணம்.

ரோஜா அரசியல்:

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு.

ரோஜா செய்த உதவிகள்:

மேலும், ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகள் செய்து இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா.

போட்டோ கிராபர்கள் செய்த சாதனை:

இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை ரோஜா போட்டோ எடுத்து கின்னஸ் சாதனை செய்திருக்கும் தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது, ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ கிராபர்கள் போட்டோ கிளிக் செய்து இருக்கிறார்கள்.

கின்னஸ் சாதனை செய்த ரோஜா:

தற்போது இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. புகைப்பட கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் ரோஜா மேடையில் ஏறி நிற்க அவரை சுற்றி இருந்த போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ கிளிக் செய்தனர். தெலுங்கு பேசும் போட்டோகிராபர்கள் ஒற்றுமையை காட்டுவதற்காகத்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், போட்டோகிராபர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full