சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் - தனது ரசிகர்கள், ஹேட்டர்ஸ்கள் பற்றி அனுப்பியுள்ள மெசேஜ் . Pro போட்ட ட்வீட்.
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார், ஆசை நாயகன், ஆணழகன், தல என்று பல்வேறு பட்டப்பெயருடன் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், இன்ரோடு திரையுலகிற்குள் நுழைந்து 30 வருடத்தை நிறைவு செய்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.
மேலும், தல அஜித் நடித்த முதல் படம் அமராவதி என்று தான் அனைவருக்கும் தெரியும்.ஆனால், திரையுலகில் அஜித் நடித்த முதல் படத்தின் காட்சியை அனைவரும் பார்த்து இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.இயக்குனர் செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த "என் வீடு என் கணவர்" என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : காலா படத்தில் புரட்சி பெண்ணாக நடித்த நடிகை - பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ்.
இந்தப் படத்தில் வரும் என் கண்மனி என்ற பாடலில் சைக்கிளில் வரும் பள்ளி மாணவனாக அஜித் குமார் நடித்து உள்ளார். இப்படம் கடந்த 1990ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதுதான் அஜித் நடித்த முதல் படம். இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த நிலையில் நடிகர் அஜித், சினிமாவில் தனது 30 ஆண்டு பயணத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் அஜித் அனுப்பியுள்ள மெசேஜ் பற்றி அவரின் பி ஆர் ஓ, சுரேஷ் சந்திரா ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அஜித் அனுப்பிய அந்த மெசேஜ், என் ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், பாரபட்சமில்லாத விமர்சனங்களை நடுநிலையாளர்களிடமிருந்தும் முழு மனதாக அன்புடன் ஏற்கிறேன். வாழுங்கள், வாழ விடுங்கள். என்றும் நிபந்தனையற்ற அன்புதான் என்று தெரிவித்துள்ளார்.