பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி 19 இரவு கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விபத்தில் உயிரிழந்த தனது உதவியாளர்களுக்கு சங்கர் மிகுந்த வருத்தத்தை தெரிவித்ததோடு அவர்களது குடும்பத்திற்கு உதவியும் செய்திருந்தார். இது நடந்து சில மாதங்கள் ஆன நிலையில் சமீபத்தில் சங்கரின் முன்னாள் உதவியாளர் பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் A V அருண் பிரசாத் இவர் தமிழில் வெங்கட் பர்கர் என்ற பெயரால் அறியப்பட்டவர். இவர் ஷங்கரின் ஐ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மேலும், இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் ‘4ஜி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவாகவும் அறிமுகமாவதாக இருந்தது. இந்த நிலையில் இவர், நேற்று (மே 15) காலை கோயம்பத்தூரில் பைக் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

நண்பரை பார்க்க சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிய போது லாரி மீது அருண் பிரசாத்தின் பைக் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துவிட்டார். தனது இயக்குனரின் மறைவை எண்ணி ஜி பி பிரகாஷ் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் அருனுடன் இறுதியாக பேசியது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஜி வி பிரகாஷ். அதில், ஒரு வாரத்துக்கு முன்னாடிகூட நாங்க பேசிக்கிட்டோம். 

 ‘இன்னும் ஒரு நாள் மட்டும் மற்ற கேரக்டர்களுக்கு ஷூட்டிங் இருக்கு. லாக்டெளன் முடிஞ்சதுக்கு அப்புறம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்’னு சொன்னார்அருண் பிரசாத் என்கிற அவரோட பெயரை சினிமாவுக்காக வெங்கட் பக்கர்னு மாற்றியிருந்தார். போன வாரம் பேசும்போது, ‘என்னோட ஒரிஜினல் பெயரையே சினிமாவுக்கும் யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். வெங்கட் பக்கர்னு இனிமேல் யூஸ் பண்ண மாட்டேன்’னு சொன்னார். இனி என் வாழ்க்கையில் நான் அவரை ரொம்பவும் மிஸ் செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும், 4ஜி படத்திற்கு பின்னர் இன்னொரு படம் பண்ணலாம்னும் அருண்கிட்ட சொல்லியிருந்தேன். ஆனா, இப்படி ஆகும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்ல என்று கூறியுள்ளார் அருண்.

Advertisement
Advertisement