Money Heist - ஐ போன்று பாகிஸ்தானில் உருவான வெப் தொடர் - டீஸரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 23/10/2020

Netflix-ல் மிகவும் பிரபலமான சீரிசான 'Money Heist' தொடரை போன்று பாகிஸ்தானில் எடுத்திருப்பது சமூக வளைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது வளைர்ந்து வரும் நவீன சினிமா உலகில் சினிமாவிற்கு இணையாக 'வெப் சீரிஸ்' எனப்படும் இணையதள தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. Amazon,Netflix போன்ற ஆன்லைன் OTT தளங்களில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் Netflix OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'Money Heist ' தொடர் உலகளவில் பிரபலமானது.

https://www.youtube.com/watch?v=m9D_-EN9Ys0

அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே மையாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த Money Heist வெப் சீரீஸ். மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை ஒரு குழு ஒன்றை அமைத்து தனது கட்டளைகள் மூலம் எந்த தடயமும் பதிக்காமல், விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் அந்த கொள்ளையன்? அந்த கொள்ளை கும்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது இதன் கதை.

இந்த கதையில் ஆண்கள் கதாபாத்திரத்தில் ப்ரொஃபஸர், பெர்லின்,பொகோட்டா,சுவாரஸ் என்று பல இருந்தாலும் இவர்களுக்கு இணையாக பெண்கள் கதாபாத்திரத்தில் டோக்கியோ, நைரோபி, ரேக்யூல் என்று பலர் ரசிகர்களை கவர்ந்தனர். மேலும், இந்த Money Heist தொடரில் நடித்த அனைவரும் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். மேலும், Money Heist இயக்குனர் மற்றும் அதில் நடித்த பிரபலங்கள் கூட தமிழ் மீடியாக்கள் பேட்டிகளை எடுத்து.

https://twitter.com/yamini109/status/1318975715111436288

Money Heist தொடரின் அடுத்த அத்யாயம் எப்போது வரும் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். என்னதான் Netflix-ல் Money Heistக்கு பின்னர் பல தொடர்கள் வந்தாலும், இதை அடிக்க எதுவும் இல்லை தான். இப்படி ஒரு நிலையில் பாகிஸ்தானில் Money Heist -ஐ போன்று ஒரு வெப் சீரிஸ்ஸை தயாரித்து இருக்கின்றனர். “50 crores” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரின் டீஸர் கடந்த ஞாயிற்று கிழமை வெளியாகி இருந்தது.

https://twitter.com/marlboroanyway/status/1318181050523279362

இந்த டீசரை கண்ட நெட்டிசன்கள் பலரும் இது என்னடா Money Heistக்கு வந்த சோதனை என்று புலம்பி தள்ளி வருகின்றனர். மேலும், Money Heist - 1020p என்றும் இந்த 50 Crores தொடர் 240பி என்றும் கேலி செய்து வருகின்றனர். நீங்க என்ன பாகிஸ்தான் வங்கிய கொள்ளை அடிக்க போறீங்களா ? அது தான் ஏற்கனவே காலியா இருக்கே என்று கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full