6 வருஷம் மாதிரியே தெரியல - நானும் ரவுடி தான் படத்தின் போதே கேரவனில் நயனுடன் படு நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ள விக்கி.

By Rajkumar · 22/10/2021

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்கிய இரண்டாவது படம் நானும் ரௌடி தான். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் 'நானும் ரௌடி தான் ' படத்தின் போது தான் பற்றிக்கொண்டது என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெளியாகி நேற்றொரு 6 ஆண்டுகளை நிறைவு செய்தது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட விக்னேஷ் சிவன், 6 வருஷம் மாதிரியே தெரியல, காத்துவாக்குல நானும் ரவுடி தான் படத்தின் சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவிட்டு இந்த படத்தின் போது நயன்தாராவுடன் எடுத்த சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் கேரவனில் நயனுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படமும் இருகிறது.

இதையும் பாருங்க : நாம் இருவர் நமக்கு இருவர் 2 வில் இன்று(Epi- 314 oct 22) முழு எபிசோட் இதோ.

அதிலும் அந்த புகைப்படத்தில் நயன்தாரா எப்போதும் விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் கொடுக்கும் ட்ரேட் மார்க் போஸை கொடுத்தபடி இருக்கிறார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ஆகிய இருவரின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவான் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம். அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

அந்த லவ் நல்லா இருக்கிறது. அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நெற்றிக்கண் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full