வீடு முழுதும் விஜய்யின் புகைப்படங்கள் - தளபதியை தலை பிள்ளையாய் எண்ணி வாழ்ந்து வரும் பாட்டி
நடிகர் விஜயின் தீவிர பெண் ரசிகை ஒருவர் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நெல்லையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் விஜயின் தீவிர ரசிகையாக இருக்கும் தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் தான் வள்ளியம்மாள். இவருக்கு தற்போது 65 வயது ஆகிறது. இவருக்கு வெங்கடேசன் என்ற ஒரு மகன் மட்டும்தான் இருக்கிறார். இவர் கணவரை இழந்து தன்னுடைய மகனுடன் மன்னார்கோவில் கிராமத்தில் வசித்து வருகிறார்.
விஜய் தீவிர ரசிகை:
அது மட்டும் இல்லாமல் வள்ளியம்மாள் விஜயினுடைய மிகப்பெரிய தீவிர ரசிகையாம். விஜயின் நடிப்பில் முதலில் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து இவர் விஜயின் ரசிகையாக இருக்கிறார். அதற்கு பிறகு செந்தூரப்பாண்டி படத்தில் விஜயின் நடிப்பை பார்த்து இவர் தீவிர ரசிகையானார். அன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயினுடைய படங்களை ஒன்று விடாமல் தியேட்டரில் பார்த்து ரசித்து வருகிறார் வள்ளியம்மாள்.
https://www.youtube.com/watch?v=b0m5Cc5YyO0
வள்ளியம்மாள் பாட்டி குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் விஜய்னுடைய படம் ஒரு தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகிறதோ அதுவரை இவர் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்று தவறாமல் படத்தை பார்த்து விடுவாராம். மேலும், விஜய்யின் ரசிகையாக இருந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் அவரை தன்னுடைய மகனாகவே நினைக்க ஆரம்பித்தார். பல ஆண்டுகளாகவே வள்ளியம்மாள் ஊருக்குள் எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் தான் விஜய் என்று சொல்லி வருகிறார். இதனாலே ஊருக்குள் அவரை விஜய் வள்ளியம்மாள் பாட்டி என்று தான் அழைக்கிறார்கள்.
வள்ளியம்மாள் பாட்டி பேட்டி:
அதுமட்டுமில்லாமல் விஜயினுடைய நியாபகமாக வள்ளியம்மாள் பாட்டி வீடு முழுவதுமே விஜய் நடித்த படங்களுடைய புகைப்படங்களையும், அவருடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையுமே பிரேம் செய்து வைத்திருக்கிறார். அதோடு தன்னுடைய பீரோவில் கூட வள்ளியம்மாள் பாட்டி விஜயினுடைய புகைப்படம், அவரைப் பற்றிய செய்திகளையும் பத்திரமாக வைத்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக பேட்டியில் வள்ளியம்மாள், நடிகர் விஜய் தான் எனக்கு மூத்த மகன். செந்தூரப்பாண்டி படத்திலிருந்து விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்நாள் ஆசை.
விஜய் குறித்து சொன்னது:
விஜய் வரலாறு புத்தகம் மூலம் அவரைப் பற்றி நான் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன். சினிமாவை விட்டு விஜய் அரசியலுக்கு வந்தது தான் எனக்கு வருத்தம். இருந்தாலுமே அவர் அரசியலில் வெற்றி அடைந்து முதலமைச்சர் ஆகி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். முதலமைச்சருடன் நின்றுவிடாமல் அவர் பிரதமராக வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கியும் வள்ளியம்மாள் பாட்டியை பாராட்டியும் வருகிறார்கள்.